மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் பொருளாதார மோசடி குற்றச்சாட்டு - முஜிபுர் ரஹ்மான்

Published By: Vishnu

06 Sep, 2022 | 09:45 PM
image

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக முதல் தடவையாக பொருளாதார மோசடி குற்றச்சாட்டை வைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறான குற்றச்சாட்டு இலங்கைக்கு தெரிவித்ததில்லை.

அத்துடன் இலங்கையில் 5வயதுக்கு குறைந்த மந்தபோசனையுடை பிள்ளைகள் 56ஆயிரம் பேர் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனாசிங்கர் கடந்த ஜூன் மாதம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் 06 ஆம் திகதி இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிநெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி ஹனாசிங்கர் கடந்த ஜுன் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கையில் குறைவாக உணவு உட்கொள்ளுபவர்கள் 50இலட்சம் பேர் இருக்கின்றனர். அதில் 3வேளை உணவு உட்கொண்டவர்கள் 2வேளைக்கு குறைத்துள்ளனர். 2வேளை உணவு எடுத்துக்கொண்டவர்கள் ஒரு நேரத்துக்கும் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த 50இலட்சம் பேரில் 2இலட்சம் பேர் கொழும்பு மாவட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 46வீதமாகவே இருந்தது. ஆனால் தற்போது அது94வீதமாகும்.

அதேபோன்று இலங்கையில் 5வயதுக்கு குறைந்த மந்தபோசனையுடை பிள்ளைகள் 56ஆயிரம் பேர் இருப்பதாகவும். உணவு பிரச்சினை உடையவர்கள் நூற்றுக்கு 22வீதம் இருப்பதாகவும் அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

குருணாகல் மாவட்டத்தில் 6இலட்சம் மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வதாகவும் அதில் இராணுவத்தினரின் குடும்பத்தினரும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதுதான் இலங்கையின் நிலைமை.

மேலும் எதிவரும் திங்கட்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது. இதில் இலங்கையின் மனித உரிமை தொடர்பில் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த பிரேரணை தற்போது வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அதில் அரசியல், சமூக பொருளாதார மனித உரிமை மீறல் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.அதேபோன்று கடந்த 12மாதங்களில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அந்த பிரேரணைக்கு புதிய ஒரு பிரேரணை இணைத்திருக்கின்றனர். அதாவது பொருளாதார மோசடி குற்றச்சாட்டை தெரிவித்திருக்கி்ன்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக முதல் தடவையாக பொருளாதார மோசடி குற்றச்சாட்டை வைத்திருக்கின்றது. இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வாறான குற்றச்சாட்டு இலங்கைக்கு தெரிவித்ததில்லை. அரசாங்கம் நிதி மோசடி செய்துள்ளதை சர்வதேச நாடுகள் சந்தேகிப்பதே இதற்கு காரணமாகும். அதேபோன்று ஐக்கிய நாடுகள் தற்போது புதிய சட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது. அதாவது அரச தலைவர் திருடும் சொத்தை மீண்டும் பொறுப்பேற்கும் சட்டமாகும். எனவே இந்த சட்டத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றதா. இந்த சட்டத்தை செயற்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என கேட்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02