இங்கிலாந்துக்கு இறுக்கமான வெற்றி

Published By: Digital Desk 3

06 Sep, 2022 | 03:22 PM
image

(எம்.எம்.எஸ்.)

19 வயதுக்குட்பட்ட இலங்‍கை  மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இளையோர் சர்வதேச போட்டித் தொடரின் முதல் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து  கிரிக்கெட் அணி  டக்வேர்த் லூயிஸ் விதியின்படி 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிது. 

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள  ரவீன் டி சில்வா த‍லைமையிலான  19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியினர் 2 போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் வென்றிருந்தது. 

இந்நி‍லையில், 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது.  

சிரற்ற கால நிலை காரணமாக போட்டி சற்று தாமதமானதால்,  48 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டிருந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 248 ஓட்டங்களை குவித்தது.  துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஷெவோன் டேனில் அ‍ரைச்சதம் (54) விளாசியதுடன், அஞ்சுல பண்டார 44 ஓட்டங்களையும், மலீஷ தருபாத்தி 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில்  படேத் சிங்  3 விக்கெட்டுக்களையும்,  தோமஸ் அஸ்பின்வோல், தனியல் இப்ராஹிம் தலா 2 விக்கெட்டுக்க‍ளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து தொடர்ந்தும் மழை குறைக்கிடவே போட்டிய ஆரம்பமாகுவதில் தடைபட்டது. பின்னர்  டக்வேர்த் லூயிஸ் விதியின்படி  24 ஓவர்களில் 172 ஓட்டங்கள் என்ற இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். ஓவர்கள் குறைக்கப்பட்டதால், அவ்வணி வீரர்கள் அதிரடியாக துடுப்பெடுத்தாடி விக்கெட்டுக்களையும் தாரை வார்த்தனர். மிகவும் பரப்பரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றிக்காக பெரிதும் போராடின. 

எவ்வறாயினும், இறுதிக்கட்டத்தில் இங்கிலாந்து அணி 23.1  ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்து இறுக்கமான வெற்றியை பதிவு செய்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில்  அலொக்ஸ் ஹோர்ட்டன் 49 ஓட்டங்களையும்,  தனியேல் இப்ராஹிம் 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில்

அணித்தலைவர் ரவீன் டி சில்வா 2 விக்கெட்டுக்களையும்,  ட்ரவீன் மெத்தியு, துவிந்து ரணதுங்க,  சஹான் மிஹிர இருவரும் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

3 போட்டிகள் கொண்ட இப்போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன், இரண்டாவது போட்டி  நாளை மறுதினம் (8) நடைபெறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07