சொக்லேட் சாண்ட்விட்ச்

Published By: Devika

07 Sep, 2022 | 08:43 PM
image

தேவையான பொருட்கள்

ப்ரட் - 6 துண்டுகள் 

டார்க் சொக்லேட் துண்டுகள் - தேவையான அளவு 

பட்டர் - தேவையான அளவு 

செய்முறை

டார்க் சொக்லேட் துண்டுகளை துருவிக்கொள்ளவும். 

ப்ரெட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் பட்டரை தடவ வேண்டும். ப்ரெட்டின் பட்டர் தடவிய பக்கத்தில் சொக்லேட் துருவலை வைத்து, மற்றொரு ப்ரெட்டின் பட்டர் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும். 

இதேபோன்று மற்ற 3 ப்ரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும். ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிது பட்டரை தடவி தயாரித்து வைத்துள்ள செண்ட்விச்சை வைத்து, கரண்டியால் லேசாக அழுத்திவிட வேண்டும். 

ப்ரட்டின் மேல் சிறிது பட்டர் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்தால்தான் உள்ளே இருக்கும் சொக்லேட் உருகி ப்ரெட் முழுவதும் படரும். சூப்பரான சொக்லேட் சாண்ட்விட்ச் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்