தனிநபரின் வருமானம் மாதமொன்றுக்கு குறைந்தது 40 ஆயிரம் ரூபாவாவது இருக்க வேண்டும் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கெனவும் கல்வி வளர்ச்சியை தனியே உயர்தரம் அல்லது பல்கலைக்கழகம் என மட்டுப்படுத்திவிடாது அனைத்து மாணவர்களையும் ஏதோ ஒரு துறையில் வளர்ச்சியடைய செய்வதற்கான வேலைத்திட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்கின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி பொருளாதாரத்திலேயோ அல்லது அரசியற் காரணிகளிலேயோ தங்கியிருக்கவில்லை. மாணவர்களின் திறன் அபிவிருத்தி மூலமே அபிவிருத்தி இலக்கை இலகுவாக அடைந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு ஹமீடியா கல்லூரியின் 132 ஆவது வருட நிறைவு வைபவமும் பரிசளிப்பு விழாவும் இன்று இடம்பெற்றது. குறித்த வைபவத்தில் சிறப்பு பிரதிநிதியாக கலந்தக்கொண்டு உரையாற்றும் போNது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.