ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளை இன்று நினைவு கூறவுள்ள நாட்டு மக்கள்

Published By: Robert

26 Dec, 2015 | 11:43 AM
image

ஆழிப் பேரலை அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­தோ­ரது 11 ஆவது நினைவு தின அஞ்­சலி நிகழ்­வு­கள் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடம்பெறவுள்ளன.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்ததமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்களிலும் விசேட பூசை நிகழ்வுகளை நடத்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கிழக்கில் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் நினைவுத்தூபிகள் மற்றும் நினைவிடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடை பெறவுள்ளன.

வடக்கில் பிர­தான நிகழ்வு வட­ம­ராட்சி உடுத்­துறை நினை­விடச் சதுக்­கத்தில் இன்று காலை 8.55 மணிக்கு ஆரம்­ப­மாகும். நினை­விடச் சதுக்­கத்தில் காலை 9.20 தொடக்கம் 9.25 மணி வரையில் பொது நினை­வுச்­சுடர் ஏற்­றப்­பட்டு மலர் மாலை அணி­விக்­கப்­பட்­டதும் ஆழிப் பேர­லையில்

உயி­ரி­ழந்த அனை­வ­ருக்கும் அக­வ­ணக்கம் செலுத்­தப்­பட்டும். தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்­றப்­பட்டு சம­கா­லத்தில் உயி­ரி­ழந்­தோரின் கல்­ல­றை­க­ளுக்கு முன்­பாக உற­வுகள் சுடர் ஏற்றி, பட்­ச­ணங்கள் படைத்து அஞ்­சலி செலுத்­து­வார்கள்.

2004 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஆழிப் பேரலை அனர்த்­தத்தில் யாழ். மாவட்­டத்தில் வட­ம­ராட்சி கிழக்கு, வட­ம­ராட்சி வடக்கு பிர­தேச கரை­யோரப் பகு­தி­களில் 1,200 க்கும் அதி­க­மா­னோரின் உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டன. பெரு­ம­ள­வி­லான வீடுகள், கட்­டி­டங்கள் இடிந்து அழிந்து பெரும் சொத்­துக்­களும் நாச­ம­டைந்­தி­ருந்­தன.

இந்த அனர்த்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் போக 14 ஆயி­ரத்து 285 பேர் இடம்­பெ­யர்ந்­தி­ருந்­தனர். 1647 பேர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்­தனர். 10 பேர் காணாமல் போயி­ருந்­தனர். 217 சிறு­வர்கள் தாயை இழந்­தனர். 165 சிறு­வர்கள் தந்­தையை இழந்­தி­ருந்­தனர். 40 சிறு­வர்கள் தாய், தந்­தை­யரை இழந்­தி­ருந்­தனர். 55 பெண்கள் வித­வை­க­ளா­கி­யி­ருந்­தனர்.

வட­ம­ராட்சி வடக்கு (பருத்­தித்­துறை) பிர­தே­ச­செ­ய­லாளர் பிரிவில் 3 ஆயி­ரத்து 509 வீடுகள் முழு­மை­யா­கவும் 2 ஆயி­ரத்து 26 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. வட­ம­ராட்சி கிழக்கு (மரு­தங்­கேணி) பிர­தேச செயலர் பிரிவில் 3 ஆயி­ரத்து 532 வீடுகள் முழு­மை­யா­கவும் 73 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் பாதிக்­கப்­பட்­டன. இரு பிர­தேச செயலர் பிரி­வு­க­ளிலும் மொத்­த­மாக 7 ஆயி­ரத்து 41 வீடுகள் முழு­மை­யா­கவும் 2 ஆயி­ரத்து 99 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் பாதிக்­கப்­பட்­டன.

வாழ்­வா­தா­ரத்­து­றை­யான மீன் பிடி பாதிக்­கப்­பட்­ட­தனால் 6 ஆயி­ரத்து 497 குடும்­பங்­களைச் சேர்ந்த 24 ஆயி­ரத்து 64 பேர் பொரு­ளா­தார ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்­டனர். நன்நீர் உவர் நீரா­கி­யதால் விவ­சாயச் செய்கை பாதிக்­கப்­பட்­ட­துடன் பயி­ர­ழி­வு­களும் ஏற்­பட்­டன. இதனால் 111.5 ஏக்­கரில் 318 விவ­சாயக் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டன.

வட­ம­ராட்சி வடக்கு (பருத்­தித்­துறை) பிர­தே­சத்தில் 153 தனியார் வியா­பார நிலை­யங்­களும் 106 சுய தொழில் முயற்­சி­யா­ளர்­களும் ஏனைய தொழில் முயற்­சி­யா­ளர்கள் 253 பேரும் பாதிக்­கப்­பட்­டனர். உடுத்­துறை கடற்­றொ­ழி­லாளர் கூட்­டு­றவுச் சங்­கத்தின் ஏற்­பாட்டில் உடுத்­துறை நினை­வி­டத்தில் இடம்­பெறு பிர­தான நிகழ்­வு­க­ளுடன் 72 பேரை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்ட மணற்­காடு சவக்­காலைப் பிட்டி மற்றும் சில எண்­ணிக்­கை­யா­னோரை நல்லடக்கம் செய்யப்பட்ட வெற்றிலைக்கேணி கட்டைக்காடு செம்பியன்பற்று புலோலி சூசையப்பர் சேமக்சாலை ஆகிய இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும்.

அத்துடன் வடமராட்சி, வடக்கு கிழக்குப் பிரதேச இந்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட வழிபாடுகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37