குளி­ய­ல­றையில் 3 தினங்களாக சிக்­கி­யி­ருந்த பெண்

Published By: Vishnu

05 Sep, 2022 | 12:54 PM
image

தாய்­லாந்தில் 3 தினங்கள் காணாமல் போயி­ருந்த பெண்­ணொ­ருவர், குளி­ய­ல­றையில் சிக்­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்ளார்.

கதவை திறக்க முடி­யாத நிலையில் குளி­ய­ல­றைக்குள் இப்பெண் சிக்­கி­யி­ருந்தார். தான் இறந்­து­வி­டக்­கூடும் என எண்­ணிய இப்பெண் குளி­ய­லறை சுவரில் பிரி­யா­விடை குறிப்­பொன்­றையும் எழு­தி­யி­ருந்தார்.

54 வய­தான இப்பெண், தலை­நகர் பேங்­கொக்­கி­லுள்ள, 3 மாடிகள் கொண்ட வீடொன்றில் தனி­யாக வசிக்­கிறார். இவ்­வீட்டில் இரும்­பி­லான வாயிற்­க­த­வுகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் இப்பெண் உதவி கோரி சத்­த­மிட்­டதை எவ­ராலும் கேட்க முடி­ய­வில்லை. 

3 தினங்­களின் பின் மிகவும் களைத்துப் போன இப்பெண், தான் வெளி­யேற முடியும் என்ற நம்­பிக்­கைய இழந்­து­விட்டார். இதனால், முகத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­படும் கிறீம் ஒன்­றினால் சுவரில் குறிப்­பொன்றை எழு­தினார். 'நான் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிக்கிக் கொண்டேன். என்னால் வெளியே வர முடி­ய­வில்லை' என அதில் எழு­தப்­பட்­டி­ருந்­தது.

உதவி கோரி நான் சத்­தி­மிட்டேன். ஆனால் ஒரு­வ­ராலும் அதை கேட்க முடி­ய­வில்லை. எவரும் வர­வில்லை' என அவர் கூறி­யுள்ளார்.

பொலி­ஸா­ருக்கு இப்­பெண்ணின் சகோ­தரி கொடுத்த முறைப்­பாட்­டை­ய­டுத்து இப்பெண் மீட்­கப்­பட்டார்.

இது தொடர்­பாக அவரின் சகோ­தரி கூறு­கையில், ' பல தட­வைகள் தொலை­பே­சியில் தொடர்­பு­கொள்ள முயன்ற போதிலும் எவரும் பதி­ல­ளிக்­க­வில்லை. அவரின் கார் வீட்டில் முன்னால் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே செல்­ல­வல்லை என்­பது தெரிந்­தது. அவ­ருக்கு ஏதேனும் நடந்­தி­ருக்­கலாம் என நான் கவ­லை­ய­டைந்தேன்' எனத் தெரி­வித்­துள்ளார். 

தகவல் கிடைத்து அவ்­வீட்­டுக்கு வந்த பொலிஸார், இரும்­பு­களை அறுத்து வீட்­டினுள் நுழைந்­தனர்.

2 ஆவது மாடிக்கு பொலிஸார் சென்­ற­போது, 3 ஆவது மாடியில் ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்­டது என பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

3 ஆவது மாடி­யி­லுள்ள படுக்கை அறை­யுடன் இணைந்த குளி­ய­லறை ஒன்றில், அப்பெண் காணப்­பட்டார்.  குளி­ய­லறை கதவை திறப்­ப­தற்கு பொலி­ஸா­ருக்கு சுமார் ஒரு மணித்­தி­யாலம் தேவைப்­பட்­டது.

'குளி­ய­ல­றைக்குள் தொலை­பேசி இருக்­க­வில்லை. உள்ளே இருந்த பல பொருட்­க­ளையும் பயன்­ப­டுத்தி கதவை உடைப்­ப­தற்கு நான் முயற்­சித்தேன். அது முடி­ய­வில்லை. உதவி கோரி அழுதேன். அதை ஒரு­வருக்கும் கேட்க முடியவில்லை.

உயிர் வாழ்வதற்காக தினங்களும் குழாய் நீரை மாத்திரம் நான் அருந்தினேன். குழாய் நீர் முடிவடைந்திருந்தால் நான் இறந்திருப்பேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10