டிசம்பர் முதலாம் திகதிமுதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட இருந்த  நீர் கட்டணம் தற்காலிகமாக நீக்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அமைச்சர் சந்திம வீரகொடி இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஆலோசணைக்கமைய  நீர்கட்டணம் உயர்வு தொடர்பில் ஆராய்வதற்கு மூன்று அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சர்  ரஹுப் ஹக்கீம் தெரிவித்தார்.

வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு ஊடகவியலாளர்கள் மாநாட்டில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.