வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் சிரேஸ்ட வீரர்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டி.

Published By: Digital Desk 4

04 Sep, 2022 | 10:16 PM
image

K.B.சதீஸ் 

வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஒழுங்கமைப்பில் உதைபந்தாட்ட சங்கத்தின் அங்கத்துவ கழங்கங்களின் சிரேஸ்ட வீரர்களுக்கான (senior challenge trophy) அணிக்கு ஒன்பது பேர் கொண்ட சுற்று போட்டியின் இறுதி போட்டி இன்று (4.09) மாலை 5.30 மணியளவில் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் North end FC & Vanni kings FC ஆகிய அணிகள் பலபரீட்சையில் மோதின. Vanni kings FC அணியினர் கடுமையாக போராடியும் போட்டியை வெல்ல முடியவில்லை. North end FC அணியினர் போட்டி நிறைவில்  7:1 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டனர். வெற்றி பெற்ற அணியினர் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது சீருடையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இறுதி போட்டியில் இலங்கை உதைபந்தாட்டத்தின் உப பொருளாளரும் வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான அ.நாகராஜன் ,  வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் மு.சௌமியன், உபதலைவர் மு.புலேந்திரன் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35