எதிர்­கா­லத்தில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்கு சாத்­தி­ய­மான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­வ­தாக வண.மாது­லு­வாவே சோபித தேரரின் பூத­வுடல் முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சப­த­மிட்டார்.


சோபித தேரரின் கோரிக்­கையின் பிர­காரம் சமூக நீதிக்­கான சமு­தா­யத்­தையும் நல்­லாட்­சியை முன்­னெ­டுக்கும் அர­சாங்­கத்­தையும் நாட்டில் நிலை­பெறச் செய்­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.


மறைந்த மாது­லு­வாவே சோபித தேரரின் இறுதிக் கிரி­யைகள் பூரண அரச மரி­யா­தை­யுடன் நேற்று பிற்­பகல் பாரா­ளு­மன்ற மைதா­னத்தில் இடம் பெற்­றன. இதில் கலந்­து­கொண்டு இரங்கல் உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
வணக்­கத்­துக்­கு­ரிய மாது­லு­வாவே சோபித தேரரின் மறைவு ஒட்­டு­மொத்த இலங்கை மக்­க­ளுக்கும் பேரி­ழப்­பாகும். எதிர்­கா­லத்தில் அவ­ரது தொலை­நோக்­கை செயற்­ப­டுத்­து­வதே சோபித தேர­ருக்கு வழங்­கக்­கூ­டிய உயர்ந்­த­பட்ச கௌரவம்.


அவர் மேற்­கொண்ட யுகப்­பு­ரட்­சியின் கார­ண­மா­கவே இன்று நான் ஜனா­தி­ப­தி­யாக உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கின்றேன் என்­பதை இந்த தரு­ணத்தில் நினை­வு­கூர வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது.இன்­று­உள்ள தேசிய அர­சாங்கம் என்ற எண்­ணக்­க­ருவும் முதன்­மு­தலில் சோபித தேரரின் ஆசிர்­வா­தத்­து­ட­னேயே கட்­டி­யெ­ழுப்­பப்பட்­டது.
அதேபோல் யுத்தம் இடம் பெற்ற காலத்­திலும் தேரர் நாட்டு மக்­க­ளுக்­காக செய்த சேவை­யினை இங்கு நன்­றி­யுடன் நினை­வு­கூர கட­மைப்­பட்­டுள்ளோம் என்றார்.
இதன் போது இந்­நி­கழ்வில் பங்­கேற்­றி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­று­கையில், நாட்டின் நலன் தொடர்பில் தமது இறுதி மூச்­சு­வரை சிந்­தனை செய்த வணக்­கத்­துக்­கு­ரிய மாது­லு­வாவே சோபித தேர­ருக்கு நாட்டில் எதிர்­கா­ல­த்தில் நில­வ­வுள்ள நல்­லாட்­சியை காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிடை­கா­த­தை­யொட்டி கவ­லைப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார்.


இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
சோபித தேர­ருக்கு நடக்கும் பூரண அரச மரி­யா­தை­யு­ட­னான இறு­திக்­கி­ரியை நிகழ்வு நாட்டின் பிரஜை ஒரு­வ­ருக்கு அரச மரி­யாதை செய்­யப்­படும் முதல் சந்­தர்ப்­ப­மாக அமைந்­துள்­ளது.ஆனால் அவர் ஒரு ஜனா­தி­ப­தி­யா­கவோ பிர­த­ம­ரா­கவோ அல்­லது வேறு பெரும் பத­வி­க­ளையோ வகிக்­க­வில்லை. இருந்த போதிலும் அவ­ருக்கு பூரண அரச மரி­யாதை வழங்­கப்­பட வேண்டும் என்ற உந்­து­தலை அவரின் செயற்­பா­டுகள் வாயி­லாக எமக்குள் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.
புத்த பெரு­மானின் போத­னை­களை கற்று அதன் வழி நடந்து எமது நாட்டு மக்­களை ஒன்­றி­ணைத்து சக­வாழ்வை ஏற்­ப­டுத்த அர்­ப் ப­ணிப்­புடன் செயற்­பட்டார். சமூக நீதியை கோரி சமூக நீதிக்­கான அமைப்­பையும் நிறு­வினார்.


வெளிநா­டு­க­ளி­லி­ருந்து எமது நாட்டின் மீது விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­தல்­களை கண்­டித்து அர­சியல் தழு­வாத நீதி­யான போராட்டம் வாயி­லாக சமூக நீதியை கோரினார்.இதை தமது பௌத்த சமூ­கத்­திற்கு மட்­டு­மல்­லாது ஒட்­டு­மொத்த இலங்­கைவாழ் மக்­க­ளுக்­கா­கவும் கோரி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.
அச்சம் இல்­லா­மலும் தமது உடல் நலம் மீது அக்­கறை கொள்­ளா­மலும் அவர் முன்­னெ­டுத்த இந்த சமூக நீதிக்­கான போராட்­டத்­தினால் நாட்டில் ஒரு ஜன­நா­யக புரட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.


இந்­நி­லையில் இவர் நோய்­க்குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்படும் முன்னர் எம்முடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை யிலும் நாட்டின் நலன் தொடர்பிலேயே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவரின் ஆலோசனையின் பேரில் நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கப்போவதை பார்க்கும் வாய்ப்பு சோபித தேரருக்கு கிடைக்
காமைக்காக வருந்தும் அதே வேளை அவரின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.