இயக்குனர் சஞ்ஜீவ புஸ்பகுமாரவின் நெறியாழ்கையில் உருவாகியிருக்கும் Burning Birds திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை டோக்கியோ ஜப்பானில் இடம்பெறவுள்ள 17ஆவது டோக்கியோ FilmeX சர்வதேச திரைப்பட விழாவில் பிரதான போட்டிப் பிரிவுக்கு தெரிவாகியுள்ளது.

இதேவேளை இத்திரைப்படமானது 21 ஆவது பூசான் சர்வதேச திரைப்படவிழாவில் முதன்முறையாக திரையிடப்பட்டது. Burning Birds திரைப்படமானது இயக்குனர் சஞ்ஜீவ புஸ்பகுமாரவின் இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இத்திரைப்படமானது இலங்கை, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டோகா கட்டார் ஆகிய நாடுகளின் கூட்டுத்தயாரிப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கையின் முன்னணி நடிகர்களான மகேந்திர பெரேரா, சமனலி பொன்சேகா, அனோமா ஜனதாரி, சாந்தனி, செனவிர்ன உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.