தாய்வான் – மேற்கு பசுபிக்கின் ஆபரணம்

Published By: Digital Desk 5

05 Sep, 2022 | 12:57 PM
image

குசும் விஜேதிலக 

1895ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது சீன-ஜப்பானிய யுத்தத்தைத் தொடர்ந்து தாய்வான் தீவினை கைவிட்ட குயிங் வம்சம், ஜப்பான் ஏகாதிபத்தியத்தின் முதலாவது குடியேற்றத்தை உருவாக்கியது. "ஜப்பானியமயமாக்கலின்" அனுகூலங்களை வெளிப்படுத்த, "மாதிரி" குடியேற்றத்தை உருவாக்க ஜப்பானியர்கள் திட்டமிட்டனர். 

வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார கட்டமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதார சிகிச்சை நிலையங்களின் வலையமைப்புகள் ஆகியன உருவாக்கப்பட்டன. 

கட்டாய ஆரம்பக் கல்வியையும் ஜப்பான் அமுல்படுத்தியது. (தமது நாட்டவர்களுக்கு இரண்டாம் நிலை கல்வியை கட்டுப்படுத்தும் நோக்கில்). காலனித்துவவாதத்தின் நன்கு கட்டமைக்கப்பட்ட பொறிகளைக் கொண்டிருந்த போதிலும், தாய்வானில் மனித அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளத்தை ஜப்பானியர்கள் இட்டனர். 

அத்தோடு, இரண்டாம் உலக யுத்தத்தினை தொடர்ந்து, 1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நேச நாடுகளின் ஆக்கிரமிப்பு உச்சத்தில் காணப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில், ஜப்பான் அரசாங்கத்தினது சொந்த திட்டங்களின் அடிப்படையில் பாரிய காணி சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டன. 

அமெரிக்க-தாய்வான் கூட்டு ஆணையத்தின் அடிப்படையில், தாய்வானியர்களும் இதேபோன்ற சீர்திருத்தங்களை பின்பற்றினர். இது, தாய்வானின் பொருளாதார அபிவிருத்திக்கான விவசாய தளத்தை உருவாக்கியது. 

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் மூலோபாய கருத்துக்களால் தாய்வானும் பாரிய நன்மையை பெற்றுக்கொண்டது. சீன தேசியவாதக் கட்சி அல்லது கொமிண்டாங் (KMT), அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது. 

சீனாவின் பரந்த பொருளாதார ஆற்றலை மேற்கத்தேய நாடுகளுடன் இணைப்பதற்காக,  சீன தேசியவாதக் கட்சியின் தலைவரான சியாங் காய் ஷேக்குடன் ஜனாதிபதி ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஒரு கூட்டுறவை வளர்த்து வந்தார். சீன கம்யூனிச புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற அமெரிக்க கொள்கை உரையொன்றின் போது, “சீனாவின் இழப்பு” என்ற ஒரு பிரபலமான சொற்றொடர் எழுந்தது. 

1950களின் முற்பகுதிக்கும் 1980களின் நடுப்பகுதிக்கும் இடையில், அமெரிக்கா, பிரதானமாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக (USAID) உட்கட்டமைப்பு, கைத்தொழில் மற்றும் தகவல் தொடர்புத் தொழிநுட்பம் மற்றும் நாட்டின் நீண்டகாலம் நீடித்துவரும் கல்வி முறை என்பவற்றில் கணிசமானளவு முதலீடுகளை செய்தது. 

1980களில் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகளும் தமது அங்கீகாரத்தை சீன மக்கள் குடியரசிற்கு மாற்றிய பின்னரும் மற்றும் தாய்வானுடன் இராஜதந்திர உறவுகளை அமெரிக்கா மேலும் வளர்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்கின்ற 1979இன் தாய்வான் உறவுகள் சட்டத்தில் அமெரிக்கா மற்றும் தாய்வான் ஆகியன கைச்சாத்திட்டதையடுத்தும் முதலீடுகள்  துரிதப்படுத்தப்பட்டன. அதன் உள்ளடக்கங்கள் “தாய்வானுக்கு தற்காப்பு தன்மையிலான ஆயுதங்களை வழங்கும் அளவுக்கு அமெரிக்காவின் இராணுவப் பாதுகாப்பை உறுதிசெய்தன”. 

எனவே, ஜப்பானும் அமெரிக்காவும், தலைவர் கோமிண்டாங் சியாங் காய்-ஷேக் (Kuomintang Chiang Kai-Shek) அவர்களும் ஏற்படுத்திய திடமான ஒரு அத்திவாரத்துடன் "தாய்வானின் அதிசயம்" ஆரம்பமாகவும், பிரியவும் தொடங்கியது. ஏற்றுமதிகளை தூண்டுகின்ற மற்றும் வெளிநாட்டு மூலதனத்தையும் நிறுவனங்களையும் ஈர்க்கின்ற நோக்கத்துடன் 1970களில் சந்தைகள் தாராளமயமாக்கல் தொடங்கியது. 

அரசின் திட்டமிடல் மற்றும் ஆதரவு, உதவி, கல்விகற்றறிந்த பணியாளர்கள், பௌதீக மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குறைந்த தொழிலாளர் செலவுகள் அதே போல் சுற்றாடல் பாதுகாப்பு குறைவு முதலிய அம்சங்கள் பாரியளவு ஜப்பானிய மற்றும் அமெரிக்க முதலீடுகளுக்கு வழிவகுத்தன.

தாய்வானின் குடும்பங்கள் மற்றும் தொழில்முனைவோருக்குச் சொந்தமான சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இத்தகைய வெளிநாட்டு முதலீடுகளுக்கு துணைபுரிந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அத்தோடு, சிறு கடன்கள் மற்றும் மானியங்கள் ஊடாக தாய்வான் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இவ்வாறான, குடும்பங்களுக்குச் சொந்தமான மற்றும் தொழில்முனைவு வர்த்தகங்கள், கூட்டுறவுச் சங்கங்களைப் போன்ற கட்டமைப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, வலுவான உள்ளூர் நடுத்தர வர்க்கத்தை வளர்ப்பதில் முக்கியமானதாக இருக்கும். அத்தோடு, தாய்வானியர்களுக்கு சொந்தமான ஒரு பலம் மிக்க தொழிற்றுறை தளத்தை வளர்ப்பதில் முக்கியமானதாக இருக்கும்.

1970-1980 காலப்பகுதிகள் முழுவதிலும், உலகில் மிகப் பெரிய நிறுவனங்கள் சிலவற்றுக்கு தற்பொழுது துணைப்பாகங்களை விநியோகித்து வருகின்ற கம்பனிகளுடன் இணைந்து உயர்-தொழில் நுட்பத்தை உற்பத்தி செய்யும் கேந்திர நிலையத்தினுள் தாய்வானின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்ற நிலையிருந்தது. எனினும் சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் தென் கொரியா" ஆகிய நாடுகளுடன் இணைந்து ஆசிய பிராந்தியப் புலிகளில்" ஒன்று எனக் கூறப்படுமளவுக்கு தாய்வான் மாறியிருந்தது.

தாய்வானுடனான சீனாவின் உறவு ரஷ்ய-உக்ரேனிய இயக்கவியலை பிரதிபலிக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும், பகிர்வு மொழி, கலாச்சாரம் மற்றும் சமூக இணைப்புகள் என்பவற்றுடன் "பிரிந்து சென்ற" ஒரு சிறிய தேசத்திற்கு அருகில் மிகப் பெரிய சக்திவாய்ந்த ஒரு அரசாக உள்ளது. இரண்டு சிறிய நாடுகளும் ஒரு காலத்தில் பெரிய பேரரசுகளின் ஒரு பாகமாக விளங்கின. தப்பொழுது, இவை இவற்றின் பெரிய அண்டைய நாடுகளுடன் அரசியலில் போட்டியிடுமளவுக்கு மாறியுள்ளன.

உண்மையில், உக்ரைனின் முன்னைய நிலை சோவியத் ஒன்றியத்தின் அரச ஆபரணங்களில் ஒன்றாக இருந்தாலும் சோளம், கோதுமை ஆகிய பொருட்களின் முக்கிய விநியோக நாடு என்ற வகையில் அதற்கு முக்கியத்துவம் இருந்தாலும், அது பூகோள உற்பத்தி மற்றும் தொழிநுட்ப விநியோக சங்கிலியில் தாய்வானுடன் போட்டியிடுமளவுக்கு முடியாத நிலையிலுள்ளது. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான தாய்வான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்திற்கு (TSMC) தாய்லாந்து கேந்திர நிலையமாக விளங்குகின்றது. இது, ஒரு கணனியில் அநேகமாக பயன்படுத்தப்படும் முன்னேற்றகரமான செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்கின்றது. செமிகண்டக்டர்களுக்கான சீன நாட்டின் 50% வீதத்திற்கும் அதிகமான கேள்வியை தாய்வான் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. அமெரிக்க நிறுவனங்கள் TSMCகளையும் அவற்றையொத்த கூட்டு நிறுவனங்களையும் இன்னும் அதிகளவில் நம்பியிருக்கின்றன

சீன நிறுவனங்கள் செமிகண்டக்டர் உற்பத்தியிலும் ஆராய்ச்சியிலும் அதிகளவு முதலீடுகளை செய்திருந்தாலும், தாய்வானின் செமிகண்டக்டர் உற்பத்தித் தொழிநுட்பம் சீனாவின் தொழிநுட்பத்தை விடவும் ஐந்து ஆண்டுகள் முன்னிலையிலுள்ளது. அமெரிக்காவின் காங்கிரஸ் சமீபத்தில் "சிப்ஸ் (Chips) சட்டத்தை" நிறைவேற்றியது. இது அமெரிக்க மைக்ரோசிப் நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் 50 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மானியங்களை வழங்குகிறது. மேலும், இது அமெரிக்காவில் தொழிற்சாலைகளை அமைக்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்குமளவுக்குக் காணப்படுகின்றது. உதாரணம்: 2024ஆம் ஆண்டளவில் அரிஷோனாவில் TSMC ஒரு உற்பத்தித் தொழிற்சாலையை  அமைக்கும். 

சீனா தனது 14,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரை வழியாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் அதன் வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை இணைக்கும் உலகின் முக்கிய உற்பத்தி மையமாக உள்ளது. இந்த கடற்கரை சீன பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆனால், பல்லாயிரக்கணக்கான தீவுகளால் இந்த முக்கியத்துவம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த பரந்த கடற்கரையோரங்களுக்கு கடல்வழி வழிசெலுத்தல் சிக்கலானது.

இந்த தீவுகளில் ஜப்பானிய ரியுக்யு (Ryukyu) தீவு, போர்னியோ (Borneo) தீவு மற்றும் சுமத்ரா (Sumatra) தீவு ஆகிய தீவுகள் அடங்குகின்றன. மேலும், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வான் தீவுகளும் அடங்கும். இவை அனைத்தும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க தடம் கொண்டவை அல்லது அதனை உள்ளடக்கியவை. இந்த "தீவு சங்கிலி" ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கான மேற்கு கடற்கரைக்குரிய ஒரு தற்காப்பு கவசமாக பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மேற்கு பசிபிக் பகுதியிலிருந்து சாத்தியமானளவு சீன படையெடுப்புகளுக்கு எதிரான ஒரு பயனுள்ள தற்காப்பாக மாறியது. இது "தீவு பாதுகாப்பு சங்கிலி" என்று அழைக்கப்படுகின்றது. இது, அமெரிக்க இராஜதந்திரியும், அரச செயலாளருமான ஜோன் ஃபோஸ்டர் டல்லெஸ் (John Foster Dulles) எதிர்பார்த்தவாறு கட்டுப்பாட்டு உத்தியை உருவாக்குகின்றது. 

இந்த கட்டுப்பாட்டு மூலோபாயத்தில் தாய்வான் ஒரு மகுடமாக உள்ளது. இது சீனாவின் மிகப்பரந்த கடற்கரையின் மையத்தில் அமைந்துள்ள நிலையில், நிச்சயமாக இது சீனாவின் உலகளாவிய வர்த்தக இயந்திரத்திற்கு ஒரு அடைப்பாக மாறும். வரலாற்று உறவுகளைத் தவிர, தாய்வான் மீதான சீனாவின் தொடர் நிலைப்பாட்டிற்கு இது ஒரு முக்கிய காரணம்; தீவு பாதுகாப்புச் சங்கிலியில் அத்தகைய "ஆபரணத்தைப்" பயன்படுத்தினால், மேற்கு பசுபிக் பெருங்கடலில் நுழைவதற்கான முக்கிய புறக்காவல் நிலையத்தை சீனா கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும். 

உலகப் பொருளாதார இயந்திரத்திற்கு பசுபிக்கின் கப்பல் பாதைகளும், சீனப் பொருளாதாரத்திற்கு உணவளிக்கும் விநியோகச் சங்கிலிகளும் மிக முக்கியமானவை. பல வழிகளில், உலகளாவிய வர்த்தகத்திற்கு தாய்வானின் உற்பத்தி முக்கியமாக காணப்படுவதால், அது சீன ஊடுறுவலில் இருந்து தேசத்தை பாதுகாத்துள்ளது. 

தாய்வானும் சீனாவும் “மீள ஒன்றிணையும்“ தனது விருப்பத்தை ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, நவீன புவிசார் அரசியல் சூழலில், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் மற்றும் வரலாற்று பகைமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க ஊடறுப்பினை தாய்வான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  இது 21ஆம் நூற்றாண்டின் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் மிக்க  தீவாகும்.

கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள குசும் விஜேதிலக்க, வங்கித் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். சர்வதேச உறவுகள் தொடர்பான பாடநெறியில் முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ளதோடு, தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை தொடர்கின்றார். அத்தோடு, சுயாதீன எழுத்தாளராகவும் ஆய்வாளராகவும் செயற்படுகின்றார். இவரை மின்னஞ்சல் (kusumw@gmail.com) மற்றும் Twitter (@kusumw) வாயிலாக தொடர்புகொள்ள முடியும். 

Factum என்பது சர்வதேச உறவுகள், தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி இலங்கையில் செயற்படும் ஆசியாவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk  என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48