ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் இயலுமை சுதந்திரக் கட்சிக்குள்ளது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

Published By: Vishnu

02 Sep, 2022 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது , வெகுவிரைவில் ஏதாவதொரு தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். வரவிருக்கும் தேர்தல் எதுவாயினும், அதில் போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் இயலுமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு 02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹரகமவில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்காக யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் சார்ந்த விடயங்களுக்காகவே கட்சி யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுள்ளன. குறித்த யாப்பு ஒரு எதிர்ப்பு வாக்கு கூட இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

முற்போக்கான கட்சிகளுடன் இணைந்து பாரிய அரசியல் கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாக அடுத்த தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதே எமது இலக்காகும். தற்போதைய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் உதவுவதற்கும் நாம் இதனைத் தெரிவிக்கவில்லை. 100 ரூபாவிற்காக 10 வயது சிறுவனை கத்தியால் தாக்கும் மனநிலைக்கு மக்களை கொண்டுள்ள இந்த சூழலை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். எனவே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாம் அரசாங்கத்தில் எந்தவொரு பதவிகளையும் ஏற்கப் போவதில்லை.

பாராளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது விரைவில் நிச்சயம் ஏதாவதொரு தேர்தல் இடம்பெறும். வரவிருக்கும் தேர்தல் எதுவானாலும் அதில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய இயலுமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு காணப்படுகிறது. அது கடினமானது என்ற போதிலும் , அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் அந்த முயற்சியும் வெற்றியளிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22