நெருக்கடி நிலையில் துணிச்சல் மிக்க தலைவராக சிறந்த வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சமர்ப்பித்துள்ளார் - அலி சப்ரி

Published By: Digital Desk 5

02 Sep, 2022 | 03:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மத்திய வங்கியுடன் இணைந்து நாங்கள் மேற்கொண்ட வேலைத்திட்டம் காரணமாகவே எரிபொருள், காஸ் பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வுகாண முடியுமாகி இருக்கின்றது. 

நெருக்கடி மிக்க காலகட்டத்தில் துணிச்சல் மிக்க தலைவராக சிறந்த வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். அதற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டிற்கு 1600 பில்லியன் வருமானம் கிடைக்கும்போது 3800 பில்லியன் செலவாக அமைந்துள்ள நிலையிலும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். 

இது மிகவும் சிறந்த வரவு செலவு திட்டமகும். இது முதலாவது நடவடிக்கை. இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள மோசமான  சூழ்நிலையில் போராட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். வெறுமனே பேசி அறிக்கைகளை விடுவதை விட பொறுப்புக்களை பாரமெடுத்து செய்வதே கடினமான விடயம். விமர்சனம் செய்பவர்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த மே நான்காம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் நெருக்கடி நிலையை பாராளுமன்றத்தில் அறிவித்தேன். 

அதன் பின்பே நாம் இந்தளவு முன் செல்ல முடிந்துள்ளது. தற்போது நாட்டில் எரிவாயு, எரிபொருள் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுள்ளோம். 

அதன் மூலம் எமது ரூபாவின் பெறுமதியை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவி எமக்கு கிடைத்ததும் மேலும் அதனை கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் நிதி அமைச்சை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே நான் திதி அமைச்சை அன்று பொறுப்பேற்று, உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டோம். 

மத்திய வங்கி ஆளுநர் உட்பட துறைசார் நிபுணர்கள் பலருடனும் நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை விளக்கி, அதற்கு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை கலந்துரையாடினோம். 

அனைவரது ஆலாேசனைகளுடன் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாகவே இன்று எமக்கு வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியுமாகி இருக்கின்றது. இல்லாவிட்டால் மக்கள் வீதிக்கிறங்கி, எமது நாடு அத்தியோப்பியா, லபனான் போன்ற நிலைக்கு சென்றிருக்கும்.

மேலும் 2021 ஆம் ஆண்டு எமது வருமானம் 1600 பில்லியன் ஆகவும் செலவு 3800 பில்லியனாகவும் இருந்துள்ளது. வரிவருமானம் குறைந்து, சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டு, ஏற்றுமதி வருமானம் குறைந்து, அன்னிய செலாவணி பெருமளவு குறைந்ததாலேயே அந்த நிலை ஏற்பட்டது. 

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம்,சமுர்த்தி உதவி, உர மானியம் வழங்குவதற்கே எமது வருமானம் போதாமல் உள்ளது. வறுமைக்கு எதிராக போராட வேண்டியுள்ளது.

வறுமை நிலையை தொடர்ந்து பாதுகாக்க முடியாது. ஜப்பான் நாடு தெரிவிப்பதுபோல் மீனுக்கு பதிலாக தூண்டில் வழங்கி வறுமை நிலையில் உள்ளவர்களை முன்னேற்ற வேண்டும்.எமது வருமானத்தில் பெருமளவு நிதி கடன்களுக்கான வட்டிக்காகவே செலுத்தப்படுகிறது. 

நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது சுமார் 1000 பேரே ஒரு மில்லியன் ரூபா வரியை செலுத்துகின்றனர். அதனால் வரி கொள்கையில் மறுசீரமைப்பு செய்யவேண்டும் எனறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53