தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலாத்காரமாக பௌத்த சிலைகளை வைப்பதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க முடியாது. பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டுமானால் ஏனைய சமயங்களுக்கு முன்னு ரிமை வழங்குவதன் மூலமே அது சாத்தியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் அரசியல் பிரிவு பொறுப்பாளரும் முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பின ருமான பத்தேகம சமித்த தேரர் இவ்வாறு தெரிவித்தார். 

தெரணியகலை லங்கா சமசமாஜக் கட்சிக் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் சிலபேர் பௌத்த மதத்தைத் தழுவியுள்ளனர். ஆனால் தற்போது பௌத்த மதத் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து மனவேதனை அளிக்கின்றது. இன்­றைய நல்­லாட்­சியில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் கொண்டு வர எந்­த­வொரு முயற்­சியும் மேற்­கொள்­ள­ப்படவில்லை. 

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டாலும் மக்­க­ளுக்கு எந்­த­வொரு நன்­மையும் கிடைக்­க­வில்லை. கடந்த அரசின் செயற்­பா­டு­களை விமர்­சித்து ஆட்­சியைக் கொண்டு செல்­கின்­றனர். 

இந்த நாட்டில் மாறி­மாறி ஆட்சி செய்த ஸ்ரீ.ல.சு.க, ஐ.தே.கட்­சிகள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்க்க இதய சுத்­தி­யுடன் செயற்­ப­ட­வில்லை. 

இந்த நாட்டில் சிங்­கள மொழி அரச கரும மொழி­யாக அமுல்­ப­டுத்­தப்­பட்ட வேளை அன்று எமது கட்சித் தலை­வ­ராக இருந்த கொல்வின் "ஒரு மொழி என்றால் நாடு பிளவுக்கு வழி வகுக்கும். இரண்டு மொழிகள் என்றால் ஒரே நாடாக இருக்கும்" என்று கூறினார். ஆனால் ஆட்சி யில் இருந்தவர்கள் அவரின் கூற்றை செவிமடுக்காததால் தான் நாட்டில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச்சென்றது.

அதனால் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த எமது கட்சியினால் முன்வைக்கும் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு செயற்படாவிட்டால் இந்த அரசை வீழ்த்த நாம் பின்நிற்க மாட்டோம் என்றார். இக்கூட்டத்தில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான ஜீன தோரி பத்ம சிறி, அஜித் சாமிந்த ஆகியோருடன் கலந்து கொண்டனர்.