பரு­வ­ம­டைந்த பெண் ஒரு­வ­ருக்கு மாதவிடாய் வரு­வது வழக்கம். இதன்­போது  பெரும்­பா­லா­னோரில் ஒரு­வித சாதா­ரண  வயிற்­று­வலி, வயிற்­றுத்­த­சை­களில் இறுக்கம், அசெ­ள­க­ரியம்  (Discomfort) என்­பன  தோன்­று­வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக சிலரில் அதி­கூ­டிய, பல நாட்கள் நீடிக்கும் வலி ஏற்­ப­டு­கின்­றது. 

இவ்­வாறு மாத­விடாய் காலத்தில் ஏற்­படும் வயிற்­று­வ­லியின் போது தோன்றும் நோய் அறி­கு­றி­க­ளா­வன, 

· வலி வழக்­க­மாக மாத­விடாய் வரு­வ­தற்கு  முன் தொடங்கி மாத­விடாய் காலத்தில் ஒன்று / இரண்டு நாட்கள்  நீடித்து மறையும். 

· அடி­வ­யிற்றில்  தசை­களில் இறுக்கம் ஏற்­ப­டலாம். (Cramps) 

· வலி அதி­க­ரிக்கும் போது குமட்­டலும் வாந்­தியும்  ஏற்­ப­டலாம். 

· வயிற்­றோட்டம் (Diarrhoea) 

· வியர்த்தல்  ((Sweating)  

· சில­வே­ளை­களில் சிறு­நீ­ரக அறி­கு­றிகள் – அதிக சிறுநீர் கழித்தல்,  அதி­க­வலி. 

· களைப்பு, 

· சில­வே­ளை­களில் மயக்­கமும் ஏற்­ப­டலாம்.  இவ்­வா­றான வலி தாங்­க­மு­டி­யா­த­ளவு வரும்­போதோ  அல்­லது வலி நிவா­ரண மாத்­தி­ரை­களால் குணப்­ப­டுத்த முடி­யாது போகும்­போது  வைத்­திய ஆலோ­சனை பெறு­வது சிறந்­தது. 

இவ்­வாறு மாத­வி­டாயின் போது ஏற்­படும் தாங்­க­மு­டி­யாத  வயிற்று வலியின் பின்­ன­ணியில் முக்­கிய கார­ணங்கள் இருக்­கக்­கூடும். 

· அடி­வ­யிற்றில் ஏற்­படும் நுண்­ணுயிர்த் தொற்­றுக்கள் மற்றும் சில பாலுறுப்பு நோய்கள். 

· கர்ப்­பப்­பையின் வெளிப்­பு­றங்­களில் ஏற்­பட்­டி­ருக்கும் எண்­டோ­மெற்­றி­யோசிஸ்  (Endometriosis) போன்ற நோய்கள்  இவ்­வா­றான  வயிற்­று­வ­லிக்குப் பிர­தான கார­ணங்­க­ளா­கலாம், இவை தவிர, 

· குடல்­வாலில் ஏற்­படும் அழற்சி  (Appendicitis)  

· சிறு­நீ­ரக தொற்­று­நோய்கள் 

· முட்டை வெளி­யே­று­வதால் ஏற்­படும் வலி · சினைப்­பையில் தோன்றும் கட்­டிகள் முறுக்­க­ம­டைதல் அல்­லது வெடித்தல் 

· திரு­ம­ண­மான பெண்­களில் கருத்­த­ரிப்­புடன் தொடர்­பு­டைய  பிரச்­சி­னைகள். கருச்­சி­தைவு, கர்­பப்­பைக்கு வெளியே கரு தங்­குதல் 

· அடி­வ­யிற்றில் நோய்­களால் ஏற்­படும் ஒட்­டல்கள் (Adhesion) 

· மேலும் குடல் உறுத்­து­ணர்ச்சி நோய்கள்  (Irritable bowel Syndrome)  

போன்­ற­ன­வாலும்  அடி­வ­யிற்­று­வலி  இவை மாத­விடாய் காலத்தில்  கூடு­த­லான  வலியை  ஏற்­ப­டுத்­து­கின்­றன. 

எனவே ஒரு  பெண் மாத­விடாய் காலத்தில் ஏற்­படும் தாங்­க­மு­டி­யாத வயிற்­று­வ­லியின் போது வைத்­திய பரி­சோ­த­னைக்குச் செல்­வது சிறந்­தது. இதன்­போது உங்கள் வைத்­தியர் தேவை­யான பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு வயிற்­று­வ­லிக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிந்து  அதற்­கு­ரிய  சிகிச்­சை­களை  மேற்­கொள்வார். தற்­கா­லத்தில் இளம்­பெண்கள் கூடு­த­லா­ன­வர்­களில்  மாத­வி­டாயின் போது மீண்டும் மீண்டும்  தோன்றும் அடி­வ­யிற்று வலிக்குப் பிர­தான கார­ண­மாக அமை­வது எண்­டோ­மெற்­றி­யோசிஸ் ( Endometriosis) எனும்  நோயாகும். இந்நோய் மாத­வி­டாயின் போது வயிற்­று­வ­லியை  ஏற்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாமல் குழந்தைப் பாக்­கி­யத்தை தள்­ளிப்­போ­டுதல்,  மீண்டும் மீண்டும் அடி­வ­யிற்­றி­லேற்­படும் கட்­டிகள், அவற்­றிற்­கான சத்­திர சிகிச்­சைகள் மேலும் தொடர்ச்­சி­யான அடி­வ­யிற்­றி­லேற்­படும் வலி போன்­ற­வற்­றையும் தோற்­று­விக்­கின்­றது. 

எனவே இது­பற்­றிய விளக்கம் ஒன்றை மக்­க­ளுக்கு  வழங்­கு­வது அவ­சி­ய­மாகும். 

எண்­டோ­மெற்­றி­யோசிஸ் 

முதலில் எண்­டோ­மெற்­றி­யோசிஸ் என்றால் என்ன என்­பது பற்றி நோக்­கு­வோ­மானால், பெண்­களின்   இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பா­கிய கர்ப்­பப்­பையின் உட்­சுவர் எண்­டோ­மெற்­றியம் என (Endometrium)  அழைக்­கப்­ப­டு­கின்­றது. இந்த  இழையம் சில பெண்­களில் கர்ப்­பப்­பையின் உட்­சுவர்ப் பகு­தியில் காணப்­ப­டு­வ­துடன் கர்ப்­பப்­பையின்  வெளிப்­பு­றமும் காணப்­படும். இந்­நிலை இளம்­பெண்­க­ளிலும்  குழந்தைப் பாக்­கி­யத்தை எதிர்­பார்த்து இருப்­ப­வர்­க­ளிலும்  காணப்­ப­டும்­போது  நோயினால் பாதிக்­கப்­பட்ட இழை­யங்­களை மட்டும்  அகற்றி சூல­கங்கள், பலோப்­பியன் குழாய்கள் மற்றும் கர்ப்­பப்பை  என்­ப­வற்றை தங்­க­வி­டப்­படும்.  இந்நோய் காணப்­படும் பெண்­களின்  மாத­விடாய்க் காலங்­களில்  கர்ப்­பப்­பையின்  உட்­புறம் போன்றே வெளிப்­பு­றத்­திலும் குரு­திக்­க­சிவு  ஏற்­ப­டு­வ­தனால் இவர்­க­ளுக்கு  அடி­வ­யிற்றில் ஒரு  தாங்­க­மு­டி­யாத வலி ஏற்­ப­டு­கின்­றது. இது ஒரு பொது­வான நோயாகக்  பெண்­களில் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது நடுத்­தர வய­து­டைய 10 பெண்­களை எடுத்தால் அதில் ஒரு­வ­ரா­வது இந்­நோய்க்கு ஆளாகி இருப்பார்.  வைத்­திய ஆலோ­ச­னைக்­கென வரும்  பெண்­களில்  பெரும்­பா­லா­ன­வர்­களில்  இந்நோய்  கண்­ட­றி­யப்­ப­டு­கி­றது. 

இந்நோய் (எண்­டோ­மெற்­றி­யோசிஸ்) ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள்

இதற்குப் பல கார­ணங்கள் கூறப்­பட்­டாலும்  பொது­வாக ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய  கார­ண­மாக இருப்­பது மாத­விடாய்க் காலங்­களின் போது கர்ப்­பப்­பையின் உட்­சு­வர்ப்­ப­குதி உடைந்து  வெளி­யே­று­கின்­ற­போது  அதன் ஒரு பகுதி பலோப்­பியன் குழா­யூ­டாக பின்­னோக்கிச் சென்று வயிற்­றினுள் தேங்கி வள­ரு­கின்­றது.  இதனால் ஒவ்­வொரு  மாத­விடாய்க் காலங்­க­ளிலும் கர்ப்­பப்­பையின் வெளிப்­பு­றத்­திலும் குருதிக் கசி­வு­களும், குரு­தித்­தேக்­கமும் உரு­வாகும். இவ்­வாறே இந்த எண்­டோ­மெற்­றி­யோசிஸ் பெண்­களின்  அடி­வ­யிற்­றினுள் தோன்றிக் காணப்­படும். 

எண்­டோ­மெற்­றி­யோசிஸ்  நோயின் 

அறி­கு­றிகள் 

சில பெண்­களில் இந்­நோயின்  ஆரம்ப நிலையில் எவ்­வித நோய் அறி­கு­றி­க­ளையும் தோற்­று­விக்­காது. ஆனால்  ஏனை­யோரின்  ஒன்று அல்­லது  பல நோய் அறி­கு­றி­களைத் தோற்­று­விக்கும் பொது­வான  நோய் அறி­கு­றி­க­ளா­வன, 

1) மாத­விடாய்க் காலங்­களில் அடி­வ­யிற்றில் கடு­மை­யான  வலி 

2) தாம்­பத்­திய உறவின் போது அடி­வ­யிற்றில் கடு­மை­யான வலி. 

3) பொது­வான ஒரு அடி­வ­யிற்­று­வலி

4) குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டைதல்

இந்த எண்­டோ­மெற்­றி­யோசிஸ் நோயின் போது வயிற்­று­வலி மாத­விடாய் வரு­வ­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்­னரே ஆரம்­பித்து மாத­விடாய் வரு­கின்ற நாட்கள் முழு­வதும் நீடிக்கும். சில பெண்­களில் இந்த வயிற்­று­வலி மாத­விடாய்  வரா­த­நாட்­க­ளிலும்  காணப்­படும். தாம்­பத்­திய  உறவின் போது ஏற்­படும் வலி  தாம்­பத்­திய  உறவின் பின்­னரும்  சில மணி­நேரம் நீடிக்கும். சில­பெண்­களில்  குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டை­வ­தற்கு  அவர்­க­ளது  தாம்­பத்­திய உறவே ஒரு வலி மிகுந்த விட­ய­மாக உள்­ள­துடன்,  அப்­பெண்­களில் இந்­நோ­யினால் பலோப்­பியன் குழாய்கள் மற்றும் சூல­கங்கள் என்­பன ஆரோக்­கி­ய­மற்­ற­ன­வாக இருப்­ப­து­வுமே காரணம்.  அதா­வது  இவர்­க­ளது சூல­கங்­க­ளி­லி­ருந்து  முட்­டைகள் சரி­யாக  வெளி­யேற்றப் படு­வ­து­மில்லை. இவ்­வாறு வெளி­யேற்­றப்­படும் முட்­டைகள்  சரி­யாகப் பலோப்­பியன் குழாய்­க­ளி­னூ­டாக பய­ணிக்க  முடி­யாது  அக்­கு­ழாய்கள்  அடை­பட்டும் இருக்கும்.  சில­பெண்­களில் இந்த வயிற்­று­வலி அவர்கள் மலங்­க­ழிக்கும் போதும் சிறுநீர் கழிக்கும் போது கூட ஏற்­படும். 

எண்­டோ­மெற்­றி­யோசிஸ் நோய் உறு­திப்­ப­டுத்­தப்­படும் முறை 

வ்­வா­றான நோய் அறி­கு­றிகள் உங்­களில் காணப்­படும்  போது உங்­க­ளது  அடி­வ­யிற்றைப் பரி­சோ­திக்கும் மருத்­துவர் இந்நோய்  இருப்­ப­தாக சந்­தே­கித்தால் முதலில் ஒரு ஸ்கான்  (Ultra Sound Scan)  பரி­சோ­த­னையை மேற்­கொள்வார். இந்த ஸ்கான் பரி­சோ­த­னையின் போது இந்த நோயினால் ஏற்­ப­டுத்­தப்­படும் நாள்­பட்ட குருதி சேர்ந்த சூலகக்  கட்­டி­யான சொக்லேட் சிஸ்ட்  (Chocolate Cyst)  இருப்பின்  இதனைக்  கண்­ட­றி­யலாம். ஆனால் இந்­நோயின் மற்­றைய நிலைகள் இந்த ஸ்கான் மூலம்  கண்­ட­றி­யப்­பட முடி­யாது.  எனவே  இந்த  சொக்லேட் சிஸ்ட்  தவிர ஏனைய  நிலை­களில்  இந்நோய்  இருப்­ப­தனைக் கண்­ட­றிய  லப்­பி­ரஸ்­கொப்பி  (Laparoscopy)  பரி­சோ­த­னையே சிறந்­தது. 

எண்­டோ­மெற்­றி­யோசிஸ் நோய்க்­கு­ரிய சிகிச்­சைகள் 

இந்­நோய்க்­கு­ரிய சிகிச்­சைகள் மருந்­துகள் மூலமும்  சத்­தி­ர­சி­கிச்சை மூலமும்  வழங்­கப்­படும். சில­வே­ளை­களில்  ஒரு பெண்­ணிற்கே இவ்­விரு முறை­களும் பாவிக்­கப்­படும். சிகிச்சை முறைகள் உங்­க­ளது வயது, நோய்  அறி­கு­றிகள்  உக்­கி­ரத்­தன்மை மற்றும் உங்­க­ளது தனிப்­பட்ட விருப்பம், நீங்கள் கர்ப்­பந்­த­ரிக்க விருப்­ப­மு­டை­ய­வரா? என்­ப­வற்றைப் பொறுத்துத் தீர்­மா­னிக்­கப்­படும். 

மருந்­துகள் மூல­மான  சிகிச்­சையின் 

பங்­க­ளிப்பு 

இந்­நோய்க்­கு­ரிய மருந்­து­க­ளாக ஓமோன் மாத்­தி­ரை­களும்   (Hormones)  வலி நிவா­ர­ணி­களும்  (Pain Killers) பாவிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த ஓமோன் மாத்­தி­ரைகள் இந்­நோயின் வளர்ச்­சியை தற்­கா­லி­க­மாகக் கட்­டுப்­ப­டுத்தி உங்­க­ளு­டைய  பிரச்­சி­னை­க­ளுக்கு  தற்­கா­லிகத் தீர்வைக் கொடுக்கும். ஆனால் குழந்தைப்  பாக்­கி­யத்தைத் துரி­தப்­ப­டுத்த நினைப்­ப­வர்­க­ளுக்கு இந்த ஓமோன் மூல­மான சிகிச்சை சிறந்த தீர்­வாக அமை­யாது. அவர்­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்­சையே பல­ன­ளிக்கும். 

இந்த ஓமோன்­க­ளி­லுள்ள சிக்கல் என்­ன­வென்றால் இவற்றால் ஏற்­படும் பல பக்­க­வி­ளை­வு­களே ஆகும். இதனால் இதை 6–9 மாதங்­களே பாவிக்க முடியும். 

இந்­நோய்க்­கு­ரிய சத்­தி­ர­சி­கிச்­சையின் 

பங்­க­ளிப்பு 

இந்­நோய்க்­கு­ரிய  சத்­தி­ர­சி­கிச்­சைகள் இரு­வ­கைப்­படும். அதா­வது இந்த நோயினால் பாதிக்­கப்­பட்ட இழை­யங்­களை மட்டும் அகற்­றுதல்  மற்றும் முற்­றாக கருப்­பப்­பையை சூல­கங்­க­ளுடன் சேர்த்து பாதிக்­கப்­பட்ட இழை­யங்­களை அகற்­றுதல், இந்த சத்­தி­ர­சி­கிச்­சைகள் இரு­வ­ழி­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவை­யா­வன பாரம்­ப­ரிய வயிற்றில் வெட்டை ஏற்­ப­டுத்தி செய்­யப்­படும்  சத்­தி­ர­சி­கிச்சை  (Laparotomy)  லப்­பி­ரஸ்­கொப்பி  மூலம் செய்­யப்­படும் சத்­தி­ர­சி­கிச்சை.

இளம் பெண்­க­ளிலும், குழந்தைப் பாக்­கி­யத்தை எதிர்­பார்த்­தி­ருக்கும்  பெண்­க­ளிலும் பாதிக்­கப்­பட்ட இழை­யங்­களை மட்டும் அகற்றி சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­படும். கர்ப்­பப்பை,  சூலகம்  தங்­க­வி­டப்­படும்.  இதன்­போ­துள்ள  சிக்கல் என்னவென்றால் சிறிது காலத்தின் பின்  இந்நோய் மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது. 

சற்று வயது கூடிய  (40வயதிற்குமேல்) பெண்களிலும் மீண்டும் ஒரு குழந்தை பெறும் எண்ணம் இல்லாதவர்களிலும் இந்நோய் காணப்படும்போது பாதிக்கப்பட்ட இழையங்களுடன் கர்ப்பப்பை, சூலகங்களும்  சத்திரசிகிச்சை மூலம்  அகற்றப்படுகின்றன. அவ்வாறனவர்களில் இந்நோய்  மீண்டும் தோன்ற வாய்ப்பில்லை. இவ்வாறானவர்களுக்கு உடல் பலவீனமடைவதைத்  தடுப்பதற்கு சிறிது காலம் ஓமோன் மாத்திரைகள் பாவிக்க வேண்டும். 

எனவே நேயர்களே பரம்பரை அலகுகளின் பங்களிப்பினால் சில பெண்களில் ஏற்படுகின்ற இந்நோய் பல வழிகளிலும் சிக்கல்களை  தோற்றுவிக்கின்றது. ஆனால்  கர்ப்பகாலத்திலும்,  மெனோபோஸ் பருவத்திலும்  இந்நோய் தாக்குவதில்லை மறைந்து போகிறது. 

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி ஒரு பொதுவான பிரச்சினை. தகுந்த வைத்திய  ஆலோசனையின்படி இதற்கு தீர்வு காண்பது உங்களது கடமை.