லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிப்பு

Published By: Digital Desk 3

02 Sep, 2022 | 02:00 PM
image

(எம்.மனோசித்ரா)

திங்கட்கிழமை முதல் மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். உலக சந்தையில் எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை சூத்திரத்திற்கு அமைவாக புதிய விலைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதுவரையில் 50 சுமார் 50 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு ஏற்கனவே காணப்பட்ட 'வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் செயலியை (Home Delivery App)' மீண்டும் செயற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.

இதுதவிர வெளிநாடுகளிலுள்ளவர்கள், எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கையிலுள்ள தமது உறவினர்களுக்கு லிட்ரோ சிலிண்டர்களை பெற்றுக் கொடுப்பதற்கான செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

அதற்கமைய வெளிநாடுகளிலுள்ளவர்கள் சிலிண்டர்களுக்கான டொலர்களை செலுத்திய பின்னர், அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏனைய போட்டி நிறுவனங்களை விட குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். குறைக்கப்படும் விலைகள் திங்களன்று அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59