அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு கணவன் வாக்களித்ததால் ஆத்திரமடைந்த மனைவி தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கணவனுக்கு தடை விதித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்களான நிலையிலும், டொனால்ட் டிரம்பிற்கு  பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

பெயர் வெளியிடப்படாத கணவன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘பொதுவாக நானும் எனது மனைவியும் எதிரெதிர் செயல்களையே செய்து வருகிறோம். நான் தியேட்டருக்கு போகலாம் என்று அழைத்தால், என் மனைவி ஹொட்டலுக்கு போக விருப்பம் தெரிவிப்பார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது என் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தார்.இதற்கு எதிராக நான் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களித்தேன். இதனை அறிந்த என் மனைவி ஆத்திரத்தில் கடுமையாக என்னை சாடினார்.

இதுமட்டுமில்லாமல், அடுத்த 30 நாட்களுக்கு அவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என எனக்கு தடை விதித்துள்ளது பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக’அந்த தகவலில் கணவன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சிலர், ‘டொனால்ட்  டிரம்பிற்கு வாக்களித்த கணவன்களின் மனைவிகள் இதே நடவடிக்கையை எடுத்தால், அது ஆபத்தில் முடிந்து விடும்’ என கருத்து தெரிவித்துள்ளனர்.