இத்­தா­லியைச் சேர்ந்த ரொக்கோ சிப­ரெடி (51) எனும் ஆபா­சப்­பட நடிகர் அந்­நாட்­டி­லுள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்பி­ப்­பது அவ­சியம் என வலி­யு­றுத்தும் மனு­வொன்றை அந்­நாட்டு அர­சுக்கு அனுப்­பு­வ­தற்­காக கையெ­ழுத்து வேட்­டை­யொன்றை ஆரம்­பித்­துள்ளார்.

இந்­நி­லையில் பாட­சா­லையில் மாண­வர்­க­ளுக்கு பாலியல் கல்வி கற்­பிப்­ப­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கினால் தானே பாலியல் கல்வி ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­று­வ­தற்கு விரும்­பு­வ­தா­க தெரிவித்துள்ளதுடன் தனது பெய­ரையும் அனு­ப­வத்­தையும் இத்­திட்­டத்­துக்கு பயன்­ப­டுத்தத் தயா­ரா­க­வுள்ளதாகவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். 

இத்­தா­லிய கல்வி அமைச்­ச­ரான ஸ்டெஃபா­னி­யா­வுக்கு அனுப்பப்படவுள்ள மேற்படி மனுவில் இதுவரை 21,600 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.