விவசாயம் செய்யப்படாத காணிகளின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படும் என்ற சுற்றறிக்கையை ஜனாதிபதி இரத்துச்செய்ய வேண்டும் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

Published By: Vishnu

31 Aug, 2022 | 05:01 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் விவாசாயம் செய்யப்படாதவிடத்து அதற்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென வடமாகாண காணி ஆணையாளர் விடுத்துள்ள சுற்றறிக்கை உடனடியாக இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வற் வரிகள் அதிகரிக்கப்பட்ட அடுத்துவரும் 4 மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம், பொருளாதார நெருக்கடிகளுக்கும் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு எப்படி நிவாரணத்தை வழங்கப்போகின்றது?

5 ஏக்கருக்குட்பட்ட விவசாய நடவடிக்கைகளுக்கு பெறப்பட்ட வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டபோதும் அவை மக்களை சரியாக சென்றடையவில்லை.

ஒரு சிலருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே கமநல திணைக்களம் இது தொடர்பில் முறையான திட்டமிடல்களை முன்னெடுத்து மக்களுக்கு  தெளிவுபடுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதற்கு முதலில் 18 வயது இளைஞன் ,யுவதி வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் ஆட்சியாளர்கள் நாட்டை வைத்திருக்க வேண்டும்.

தமது எதிர்காலம் என்னவென தெரியாத நிலையில் இளைஞர் ,யுவதிகள் உள்ள நிலையில் வருமான வரி திணைக்களத்தில் அவர்கள் பதிவு செய்ய வேண்டுமெனக்கூறுவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று  அரச  நிறுவனர்களில் இடம்பெறும்  ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த அமெரிக்காவிலுள்ள நடைமுறை  இங்கும் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு போதும் நடக்காது. அரசியலும் அரச நிறுவனங்களில் நடக்கும்  ஊழல் மோசடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது.

தற் போது கூட அரச நிறுவனங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தரகுப்பணம் அரசியல்வாதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றது.

எனவே இதனை ஆட்சியாளர்களினால் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. இன்றும்  அரச நிறுவனங்கள்   ஊடாக ராஜபக்ஷ் குடும்பத்திற்கு வருமானங்கள்  சென்று கொண்டிருக்கின்றன. ஆகவே இந்த அரச நிறுவனங்களில் நடக்கின்ற மோசடிகளை தடுப்பதென்பது தற்போதுள்ள அரசுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்.

மேலும் மண்ணெண்ணெய் இல்லாது பாதிக்கப்பட்டுள்ள பெரும்தொட்டத்தொழிலாளர்கள், மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமெனக்கூறப்பட்டுள்து. முதலில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டபோது அது படகுகளின் உரிமையாளர்களையே சென்றடைந்தது. ஆகவே வழங்கப்படும் நிவாரணம் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்ற  சகல மீனவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

வடமாகாண சபையினுடைய மாகாண காணி ஆணையாளர்   தற்போது 25/7/22 அன்று வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் விவசாயம் செய்யப்படாதவிடத்து அதற்கான அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படுமென அறிவித்துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்களுக்கு போதியளவு உரம் இல்லை. எரிபொருள் இல்லை.மக்கள் தங்கள் காணிகளுக்கு சென்றுவரக்கூடிய சூழ்நிலை இல்லை. விதைகள், கிருமி நாசினிகள் இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் அந்த மக்கள் ஏன் அந்தக்காணிகளில் விவசாயம் செய்ய வில்லையென ஜனாதிபதி ஆராய வேண்டுமே தவிர விவசாயம் செய்யாத காணிகளை மீளப்பறிக்கவேண்டுமென்ற கொள்கை முற்றிலும் மக்களுக்கு விரோதமானது.

வடமாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் அந்த மக்கள் ஒரு ஏக்கர், இரு ஏக்கர் காணிகளை பெற்றுக்கொள்ள எவ்வளவு காலம் அலைந்திருப்பார்கள் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விவசாயம் செய்யாத  காணிகளை ஏன் அதில் விவசாயம் செய்யவில்லை என்பதனை அறிந்து அவர்கள் விவசாயம் செய்வதற்குரிய வழிவகைகளை அரசு செய்ய்யவேண்டுமே தவிர அவர்களின் காணிகளை பறிக்கக்கூடாது. எனவே அவர்களின் காணிகளை பறிக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம்  கோருகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04