பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு தினமும் ஒருவேளை உணவு

Published By: Digital Desk 5

31 Aug, 2022 | 03:52 PM
image

நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம் வாழ்வுக்காக உணவு(FOOD FOR LIFE) உலக அமைப்புடன் இணைந்து கடந்த 07.06.2002 முதல் மக்களுக்கு தினமும் ஒரு வேளை உணவை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

நாட்டில் நிலவிவரும் கடுமையான பொருளாதார பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானம் குறைந்து துன்பப்படும் மக்களுக்கு தினமும் ஒருவேளை உணவை இலவசமாக வழங்கி சிறிதளவேனும் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தின் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம் இந்த செயற்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. 

அண்மைக்காலத்தில் மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்ளை பெற வரிசையில் நின்று இன்னல்களை அனுபவித்த மக்களில் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் வாழும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தினமும் சமைத்த உணவை இலங்கை கிருஷ்ண பக்திக்கழகம் வழங்கியது. 

இந்த செயற்பாட்டிற்கு வாழ்வுக்காக உணவு (FOOD FOR LIFE GLOBAL) உலக அமைப்பு இலங்கை கிருஷ்ண பக்திக் கழகத்துடன் இணைந்து இந்த இலவச உணவு வழங்கும் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. 

கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீP ராதா கிருஷ்ணா ஆலயத்தை அண்மித்துள்ள பிரதேசத்தில் வாழும் வருமானம் குறைந்த மக்களின் குடும்பங்களில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு உதவிக் கரம் வழங்கும் நோக்குடன் அப் பிரதேசத்தில் உள்ள 300க்கு மெற்பட்ட மக்களுக்கு தினமும் டோக்கன்களை வழங்கி, சுழற்சி முறையில் இலவசமாக சமைத்த உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த மனிதாபிமான செயற்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்திற்கு (ISKCON Sri Lanka) மனித நேயம்மிக்க பலரும், மற்றும் கிருஷ்ண பக்தி கழகஅங்கத்தவர்களும் மனமுவந்து நன்கொடைகளைவழங்கி வருகின்றனர். 

அவர்களுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருட்கடாட்சம் கிடைக்க பிரார்த்திக்கிறோம். அத்துடன் வாழ்வுக்காக உணவு உலக அமைப்பு (FOOD FOR LIFE GLOBAL) 2000 அமெரிக்க டொலர்களை மானிய (GRANT) உதவியாக வழங்கி பேருதவி புரிந்து வருகின்றது. 

பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்களுக்கு இந்த மனிதாபிமானமிக்க உதவியை மக்களின் வாழ்வு சீரடையும்வரை தொடர்ந்து செய்வதற்கே கிருஷ்ண பக்திக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

மனித நேயமிக்க நல் உள்ளங்கள் இந்தப்பணியில் இணைந்துகொண்டு உதவி நல்க முன்வருமாரும் கிருஷ்ணபக்திக்கழகம் வேண்டுகோள் விடுக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08