மூலோபாய பேச்சுவார்த்தைக்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் செல்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

Published By: Digital Desk 5

31 Aug, 2022 | 03:50 PM
image

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று 31 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். 

14 ஆவது இந்தியா - ஐக்கிய அரபு இராஜ்ஜிய கூட்டு ஆணைக்குழு கூட்டம் மற்றும் 3 ஆவது இந்தியா - ஐக்கிய அரபு இராஜ்ஜிய மூலோபாய வியூக உரையாடலுக்கும் தலைமை தாங்குகிறார்.

இந்த சந்திப்புகள், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான விரிவான மூலோபாய கூட்டாண்மை மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்ய இருதரப்பும் ஆர்வத்துடன் உள்ளது. 

மேலும் இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உயர் மட்ட சந்திப்புகளிலும் கலந்துக்கொள்ள உள்ளார்.  

இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கும் இடையில் வழக்கமான உயர்மட்ட தொடர்புகள் உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் 28 ஆம் திகதி  அபுதாபிக்கு விஜயம் செய்தார். இதன் போது ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, இரு தலைவர்களும் பெப்;ரவரி 18 திகதி மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தினர், இதன் போது இந்தியா- ஐக்கிய அரபு இராஜ்ஜிய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

வர்த்தகம், முதலீடு, மரபு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெளி, தூதரக விவகாரங்கள் மற்றும் மக்கள்  உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் கூட்டாண்மையில் முன்னேற இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்களும் உறுதிபூண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17