வரி அதிகரிப்பால் மக்களுக்கான நிவாரணம் கிடைக்காமல் போகும் - சுமந்திரன்

Published By: Digital Desk 4

31 Aug, 2022 | 07:06 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

வட் வரி அதிகரிப்பானது அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதுடன், மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணங்களும் இந்த வரி அதிகரிப்பின் ஊடாக கிடைக்காது போய்விடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்ப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் வட் வரி 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான விரியாக நூற்றுக்கு இரண்டரை வீதம் அறவிட தீர்மானிக்கப்பட்டிரு்கின்றது.

இதனால் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் இந்த வரி அதிகரிப்பின் ஊடாக இல்லாமல் போய்விடும். இது நேரடியான வரி அல்ல என்பதனால் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும்.

ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இதில் இருக்காது. இதன்படி வறுமை நிலைமையில் உள்ளவர்களுக்கு இதில் சலுகை கிடைக்கப் போவதில்லை.

அத்துடன்  இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில்  செலவீனங்களை குறைப்பதே நோக்கமாக  உள்ளது. ஆனால் பாதுகாப்பு செலவினம் இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தை விடவும் அதிகரித்துள்ளது. இதன்படி குறைக்கப்பட வேண்டிய முக்கியமான செலவினங்கள் குறைக்கப்படாது உள்ளன.

குறிப்பாக அனைவரையும் பாதிக்கும் மறைமுக வரிகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரி அதிகரிப்பால் அந்த நிவாரணங்களும் கிடைக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19