ஹிங்குராங்கொடை - உணகலாவெஹர பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 52 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினையே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.