வீரகேசரி நலன்புரிக் கிண்ணத்தை கேசரி ஸ்ரைக்கர்ஸ் சுவீகரித்தது

Published By: Priyatharshan

14 Nov, 2016 | 02:37 PM
image

வீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் நடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ( EPL) மொஷின் தலைமையிலான கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

வீரகேசரி நலன்புரிச் சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா - 2016 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் கடந்த சனிக்கிழமை கொழும்பு கொம்பனித்தொரு மலே கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றன.

இப் போட்டி கடந்த 6 ஆம் திகதி கொழும்பு -14 கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆண்கள் பாடசாலை மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் சீரற்ற காலநிலையால் குறித்த போட்டி கைவிடப்பட்டு கடந்த சனிக்கிழமை 12 ஆம் திகதி இடம்பெற்றது.

கிரிக்கெட் திருவிழா எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் குமார் நடேசன் தலைமையில் ஆரம்பமாகியது.

5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்குபற்றிவிளையாடின.

விடிவெள்ளி ஸ்டார்ஸ், ஒன்லைன் கிளடியேற்றர், சியதெஸ இலெவன், மித்திரன் இலவென், ஜீனியர்ஸ் ஹிற்றர்ஸ், மெற்ரோ கிங், சன்பிளவர் ஸ்மாஷஷ், கேசரி ஸ்ரைக்கர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில்  இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில்  பிரியதர்சன் தலைமையிலான சியதெஸ இலெவன் அணி குணரத்னம் தலைமையிலான மித்திரன் இலவென் அணியை வெற்றி கொண்டு முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

2 ஆவது அரையிறுதிப்போட்டியில் மொஷின் தலைமையிலான கேசரி ஸ்ரைக்கர்ஸ், குணரத்னம் தலைமையிலான மித்திரன் இலவென் அணியை  வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இறுதிப் போட்டியில் பிரியதர்சன் தலைமையிலான சியதெஸ இலெவன் அணியும் மொஷின் தலைமையிலான கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சியதெஸ இலெவன் அணித் தலைவர்,  கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களைப்பெற்றது.

77 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சியதெஸ இலெவன் அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 65 ஓட்டங்களைப்பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

 11 ஓட்டங்களால் வெற்றிபெற்ற கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணி இவ்வாண்டுக்கான எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் கிண்ணத்தை சுவீகரித்தது.

இப் போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக சியதெஸ இலெவன் அணியின் தலைவர் பிரியதர்சனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சியதெஸ இலெவன் அணியின் வசிமும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தொடரின் ஆட்டநாயகனாக சியதெஸ இலெவன் அணியின் துடுப்பாட்ட வீரர் சந்திரபிரகாஷ் தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக கேசரி ஸ்ரைக்கர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷ்  தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, வீரகேசரி நலன்புரி சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா - 2016 இல் இடம்பெற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஜர்ஸ் மற்றும் சுப்பர் செலன்ஜர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின.

இதில்  அகல்யா தலைமையிலான ரோயல் செலன்ஜர்ஸ் மகளிர் அணி தேவிகாகுமாரி தலைமையிலான  சுப்பர் செலன்ஜர்ஸ் மகளிர் அணியை வெற்றி கொண்டு சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரோயல் செலன்ஜர்ஸ் அணித் தலைவி அகல்யா தெரிவுசெய்யப்பட்டார்.

மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் பையரிங் ஏஞ்ஞல்ஸ் மற்றும் ஸ்பைசி ஏஞ்ஞல்ஸ் ஆகிய அணிகள் பங்குகொண்டன.

இதில்  ஜெஸ்மின் தலைமையிலான பையரிங் ஏஞ்ஞல்ஸ்  அணி  கிரிஷ்ரின் தலைமையிலான ஸ்பைசி ஏஞ்ஞல்ஸ் அணியை வெற்றி பெற்று சம்பியனானது.

மகளிருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக பையரிங் ஏஞ்ஞல்ஸ்  அணியின் கிரேஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இக் கிரிக்கெட் திருவிழாவில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி செந்தில்நாதன் உட்பட சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41