அரசு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்து நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜேசுதாசன்

Published By: Vishnu

31 Aug, 2022 | 07:09 AM
image

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்களை கைது செய்வதனை கைவிட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு  இயக்கத்தின் இணைப்பாளர் ஜேசுதாசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர்கள் போராடி ஒரு மாற்றத்தினை எதிர்பார்த்து செயற்பட்டு கொடுங்கோல் ஆட்சியை மாற்றி புதிய ஜனாதிபதியினை மாற்றி ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹிந்த ஆட்சியினுடைய நிழல் ஆட்சியினை செய்து கொண்டிருக்கிறாரா? என்ற கேள்வி காணப்படுகின்றது. 

ஜனநாயகம் தொடர்பில் பேசப்படும் போது போராட்டக்காரர்களை கைது செய்தல் செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுகின்றது. 

அனைவரும் எதிர்பார்த்தார்கள் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார ரீதியில் மாற்றம் ஏற்படும் என்று, ஆனால் அவ்வாறு இடம் பெறவில்லை. மக்கள் மீண்டும் தொடர்ச்சியாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

வடமாகாண கடற்தொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து குறிப்பாக மீனவர்களை பாதிக்கின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஊடகம் வாயிலாக ஆட்சியாளர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக மீனவ சமூகங்களின் கோரிக்கைகளை முன் வைப்பதற்காக கலந்துரையாடி இருக்கின்றோம்.

கடந்த 30 வருட காலமாக யுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதே சுவடுகளை அதே துன்பங்களை சுமந்தவர்களாக தொடர்ச்சியாக வடக்கு மீனவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு இந்திய இழுவைமடி பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த வடக்கு மீனவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08