மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனையுடன் யோசனை - அலி சப்ரி

Published By: Vishnu

29 Aug, 2022 | 09:05 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது. வறுமை கோட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனையுடனான யோசனைகளை முன்வைத்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்கட்டண திருத்தம் பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டண அதிகரிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு சேவை கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது.

1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலக்கரி மற்றும் புகையிரத சேவை மறுசீரமைக்கப்பட்ட போது சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்புக்கள் தோற்றம்பெற்றன.

இருப்பினும் அத்துறைகள் மறுசீரமைக்கப்பட்டன. உரிய காலத்தில் உரிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத்தியாவசியமானது.

வாழ்க் வாழ்க்கை செலவு அதகரிப்பினால் நாட்டு மக்கள் குறிப்பாக வறுமை கோட்டில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்னகள்.ஏழ்மை நிலையில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனைகளை சர்வதேச நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் முன்வைத்துள்ளன.

வாழ்வில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்யாதவர்கள் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் நட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58