ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

Published By: Vishnu

29 Aug, 2022 | 09:14 PM
image

( இராஜதுரை ஹஷான்)

 2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான   அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதியும்,நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ளது.

 இந்தச் சட்டமூலத்துக்கு அமைய 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2 ஆவதுபிரிவின் (1) உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, இரண்டாயிருத்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறுபில்லியன் நானூற்றி நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டராயிரம் ரூபாவாவாகவிருக்கும்

(ரூ.2,796,446,558,000) அரசாங்கத்தின் செலவினத்தொகையானது, மூவாயிரத்து இருநூற்றுஎழுபத்தைந்து பில்லியன் எழுநூற்றி எண்பத்தாறு மில்லியன் ஐநூற்று ஐம்பத்தெட்டு ஆயிரம் ரூபா (ரூ.3,275,876,558,000) என மாற்றப்படும்.

முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு அமைய 2022ஆம் நிதியாண்டுக்கானஅரசாங்கத்தின் அமைச்சுக்களின் சேவைக்காக 2022 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் 2022ஆம்

ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிவரை 2,796.4 பில்லியன் ரூபா தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

புதிய திருத்தத்துக்கு அமைய 2022ஆம் ஆண்டில் அரசாங்க அமைச்சுக்களின் செலவீனங்களுக்குஒதுக்கப்பட்ட வேண்டிய தொகை 3,275.8 பில்லியன் ரூபா வரை மதிப்பீடு செய்யப்பட்ட தொகை அதிகரிக்கப்படுவதுடன், இதற்கமைய 929.4 பில்லியன் ரூபாவினால் அமைச்சுக்களின் சேவைகளுக்கு அவசியமான செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் 2வது பிரிவின் (1) உப பிரிவின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள“மூவாயிரத்து இருநூறு பில்லியன் ரூபாவை விஞ்சுதலாகாது” என்ற சொற்களுக்குப்பதிலாக “நாலாயிருத்து எண்பத்தியிரண்டு பில்லியன் ரூபாவை விஞ்சுதலாகாது”எனும் சொல்லை இடுவதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்தத்தின் விளைவாக 2022 நிதியாண்டில் இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே பெற்றுக் கொள்ளக் கூடிய கடன்பெறுகையானது 3,200 பில்லியன் ரூபாவிலிருந்து 4,082 பில்லியன் ரூபாவரைஅதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றத்தின் அனுமதியின் கீழ் கடன்பெறக்கூடிய எல்லை 892 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கிறது.

2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது பிரிவின்4வது உபவிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “இரண்டாயிரத்து அறுநூற்றி இருபத்து மூன்று மில்லியன் நானூற்று நாற்பத்து இரண்டாயிரம் ரூபாவாகவிருத்தல்” எனும்சொல்லுக்குப் பதிலாக “இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒரு பில்லியன் நூற்றி இருபத்திமூன்று மில்லியன் நானூற்று நாற்பத்திரெண்டாயிரம் ரூபாவாகவிருத்தல்”எனும் சொல் இடப்படும்.

திருத்தத்தின் விளைவாக இந்த 4 வது உபபிரிவின் திருத்தத்துடன், 2022 நிதியாண்டுக்குள் சேவைக்காக திரட்டு நிதியத்தின் மீது விதிக்கப்படுவதற்கு சட்டங்களினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்கத்தின் மதிப்பீடுசெய்யப்பட்ட செலவீனத் தொகை 2,623 பில்லியன் ரூபாவிலிருந்து 2,901 பில்லியன் ரூபாவரை அதிகரிப்பதற்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்ட திருத்தத்தின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56