(ஆர்.வி.கே.)

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் காணமற்போயுள்ளன. மேலும் சுவாமி வாகனங்கள், மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து காணமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு தையிட்டி -கணையவில் பிள்ளையார் ஆலயத்தை பார்வையிடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அவ்வூர் மக்களுக்கு படையினர் அனுமதியளித்தனர். அப்போது ஆலயத்தில் சாமிவிக்கிரகங்கள், வாகனங்கள் பெறுமதிவாய்ந்த கற்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அங்கே இருந்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் அண்மையில் தையிட்டி பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் அங்குசென்ற மக்கள் இக்கோயிலில் இருந்த சாமி விக்கிரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் காணாமல் போயிருந்ததோடு ஆலயமும் முற்று முழுதாக அழிகப்பட்டிருந்ததை பார்த்து  அதிர்ச்சியடைந்துள்ளனர். படையினரின் கட்டுபாட்டுக்குள் இருந்த இவ் ஆலயம் யுத்தத்தின் போதும் சேதமடையாமல் இருந்தது எனவும் பின்னர் இது திட்டமிட்டு படையினாரால் அழிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.