சிறார்களுக்கு ஏற்படும் நரம்பு செல் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 08:30 PM
image

உலகளவில் ஒரு மில்லியன் குழந்தைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு நியுரோபிளாஸ்டோமா எனப்படும் நரம்பு செல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

 இதனை குணப்படுத்த தற்போது ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

நியூரோபிளாஸ்டோமா என்பது உடலின் பல பகுதிகளில் காணப்படும் முதிர்ச்சி அடையாத நரம்பு திசுக்கட்டிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். இத்தகைய பாதிப்பு குழந்தை பிறந்து ஓராண்டு முதல் ஐந்தாண்டுகளுக்குள் ஏற்படுகிறது. 

இவை பெரும்பாலும் அட்ரினல் சுரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகிறது. இதை தவிர்த்து வேறு சிலருக்கு அடிவயிறு, மார்பு, கழுத்து மற்றும் முதுகெலும்புக்கு அருகிலும் உருவாக கூடும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளில் மிக அரிதாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. 

மேலும் சில பிள்ளைகளுக்கு இத்தகைய பாதிப்பின் அறிகுறி இருந்தாலும் அவை நாளடைவில் தானாக சரியாகிவிடும். இதன் அறிகுறிகள் தொடர்ந்து நாட்கணக்கில் நீடித்திருந்தால் இதற்கு சிகிச்சை அவசியம்.

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அடி வயிற்றுப் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், மூச்சு திணறல், நெஞ்சு வலி, கண்களை சுற்றி கருவளையம், தோலின் கீழ்ப்பகுதியில் கட்டிகள், முதுகு வலி, காய்ச்சல், திடீர் எடை இழப்பு, எலும்பு வலி போன்ற அறிகுறிகள் தோன்றினால் அவை உடலின் வேறு பகுதியில் பாதிப்பை உண்டாக்கி இருக்கக்கூடும். 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, திசு பரிசோதனை, எலும்பு மஞ்ஜை பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வர். அதன் பிறகு புற்றுநோய் பாதிப்பின் நிலைகளை ஆராய்ந்து சிகிச்சையை தீர்மானிப்பர்.

சத்திர சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சத்திர சிகிச்சை, இம்யுனோதெரபி ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டு முதன்மையான மற்றும் முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இதற்கு தற்போது MIBG தெரபி எனப்படும் ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நியுரோபிளாஸ்டோமா எனும் புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறார்கள்.

டொக்டர் ராஜ்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04