ரஞ்சனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 11:47 AM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நிபந்தனைகளுடனான ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானார்.

சிறைக்குச் செல்வதற்கு முன்னரே அரசியலில் துடிப்பாய் இருந்த ரஞ்சன் ராமநாயக்கவிற்கு , தற்போது வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுடனான மன்னிப்பினால் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க அவரது விடுதலைக்காக ஒருபுறம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் , மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிச் சென்ற ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் போட்டியிட்டு முன்னின்று செயற்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பல முறை ரஞ்சனை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் , அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அது மாத்திரமின்றி ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதற்கான முயற்சியிலும் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வி கண்டது.

இவ்வாறிருக்க ஹரின் பெர்னாண்டோவும் , மனுஷ நாணயக்காரவும் நாட்டில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்திருந்த அண்மைய கால கட்டங்களில் சில கோரிக்கைகளை முன்வைத்து , அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கைகளில் இரண்டாவது கோரிக்கை ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதாகும்.

நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தாலும் ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டமையினாலும் , அதற்கான கோரிக்கையை முன்வைத்த ஹரினும் மனுஷவும் அரசாங்கத்தில் இருப்பதாலும் ரஞ்சனின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் ரணிலுடன் இணைந்ததாகவே இருக்கும் என்பது பெரும்பாலானோரின் ஊகமாகக் காணப்பட்டது.

இருந்த போதிலும் நேற்று ரஞ்சனின் விடுதலை உறுதியானதையடுத்து நேரத்துடனேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்று , அங்கு காத்திருந்து ரஞ்சனை அழைத்துச் சென்றார். பின்னர் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இருவரும் இணைந்து ஊடகவியலாளர் மாநாட்டிலும் கருத்துக்களை வெளியிட்டனர்.

அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து சுதந்திரமாக சிந்தித்து , சரியான தீர்மானத்தை எடுக்கும் அறிவு ரஞ்சனுக்கு இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் இதன் போது தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பிடிகொடுக்காத ரஞ்சன், 'இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். பிளவடைந்துள்ளோரை ஒன்றிணைக்கும் பணி என்னால் இடம்பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.' என்று சமாளித்தார்.

மறுபுறம் அமைச்சர் மனுஷ நாணயக்கார உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் பணிபுரியும் புலம் பெயர் இலங்கை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக நல்லெண்ண தூதுவராக ரஞ்சனை நியமித்து , நியமனக் கடிதத்துடனேயே வெலிக்கடை சிறைக்குச் சென்றார். இந்த கடிதத்தை மனுஷ தனக்கு காண்பித்ததாகவும் , ஆனால் அதற்கு நான் எந்த பதிலையும் கூறவில்லை என்றும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரஞ்சன் , 'நான் மக்கள் சார்பானவன். அரசியலில் சுயாதீனமாகவே செயற்படுவேன்.' என்று கூறினார். இதற்கு முன்னர் அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்த ரஞ்சனின் விடுதலை , தற்போது அவரின் அரசியல் தீர்மானம் எவ்வாறு அமையும் என்ற புதிய எதிர்பார்ப்பினை தோற்றுவித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14