ஜனாதிபதி தலைமையில் தேசிய நீரிழிவு தின நடைபவனி..!

Published By: Robert

13 Nov, 2016 | 12:16 PM
image

'நலமான நாளுக்காக இன்றே பணியை தொடங்குவோம்' தேசிய நீரிழிவு தின நடைபவனி இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமானது.

அந்த நடைபவனி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் முடிவடைந்தது. அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அனைவருக்கும் முன்மாதிரியான இந்த நிகழ்ச்சியை பாராட்டிய ஜனாதிபதி, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பும் அக்கறையும் மிகவும் முக்கியமானதென்பதை சுட்டிக்காட்டினார்.

தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக நடைபெற்ற அகில இலங்கை சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றோரின் சித்திரங்கள் அடங்கிய கண்காட்சியும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. 

நவம்பர் மாதம் 14ஆம் திகதியில் வரும் தேசிய நீரிழிவு தினத்தோடு இணைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் அலகு மற்றும் சிறுநீரக நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நடைபவனியில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால, இலங்கை சிறுநீரக நிபுணர்கள் மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி உதித் புளுக்ககே, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி நோயெல் சோமசுந்தரம் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55