குழந்தைகளின் ஆரோக்கியம்

Published By: Digital Desk 7

26 Aug, 2022 | 11:38 AM
image

ன்றளவில் குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சினையை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த பிரச்சினை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம். வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம்.

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம். குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும்.

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும். சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04