நாளை சூப்பர் நிலவு : வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்

Published By: Robert

13 Nov, 2016 | 10:51 AM
image

வழக்கமான நிலவை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) வானத்தில் தோன்றுகிறது.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும்.

பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பது தான் ‘சூப்பர் நிலவு’. இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் இருந்து சுமார் 3.84 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும்.

அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1948 ஆம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் நாளை மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46