இளமையிலேயே கருகும் மொட்டுக்கள் ! யார் பொறுப்பு ?

Published By: Priyatharshan

25 Aug, 2022 | 01:42 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையால் பல குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் தாக்கத்தால் பல குடும்பங்களில் உள்ள வயது வந்த பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் விட்டுவிட்டு தொழிலில்களில் ஈடுபட தள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலைவாசிக்கு முகங்கொடுக்க முடியாது நாளாந்த வாழ்க்கையை நகர்த்த தள்ளாடுகின்றன.

இவ்வாறு வீட்டுவேலைக்கு சென்ற நிலையில், நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்த மஸ்கெலியா சிறுமி தொடர்பான செய்திகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்தன. 

மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான ரமணி என்ற சிறுமி, 6 மாதங்களுக்கு முன்வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். பிரபல அரசியல்வாதியொருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவிலுள்ள வீட்டிலேயே குறித்த சிறுமி பணி புரிந்துள்ளார். குறித்த சிறுமி அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், சடலம் விசாரணைகளின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

இதேபோன்று சில மாதங்களுக்கு முன் இதேபோன்ற சம்பவம் டயகம சிறுமிக்கு ஏற்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். டய­க­ம பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் தீக் காயங்­க­ளுக்குள்­ளானதையடுத்து வைத்தியசாலையில் அனு­ம­திக்­கப்பட்டு சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்திருந்தார். 

அவ­ரது பிரேத பரி­சோ­தனை அறிக்­கையில் பல­முறை பாலியல் துஷ்பிர­யோ­கத்­துக்குள்­ளாக்­க­பட்டுள்ளமை தெரி­ய­வந்­ததை அடுத்து இந்த விடயம் முழு நாட்­டிலும் பாரிய அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யிருந்தது.

இவ்வாறு தொழில்களுக்குச் சென்று உயிரிழக்கும் சிறுவர், சிறுமிகள் தெரடர்பில் கடந்த காலங்களிலும் பல செய்திகள் வெளிவந்தன. ஆனால் அவற்றுக்கு எவ்வித தீர்வுகளும் கிடைப்பதில்லை.

பாடசாலைக் கல்வியை கற்க வேண்டிய சிறுவர்கள், சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப் படுவதும் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் இறுதியில் அது தற்கொலை என்று மூடப்படும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

எத்தனையோ வீதி நாடகங்கள், கூட்டங்கள், அமைப்புக்கள் மூலம் விழிப்புணர்வுகள் தொடர்ந்து  ஏற்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நகரப்புறங்களில் கடைகளிலும் பணம் படைத்தவர்களின் வீடுகளிலும் வேலைக்காக சிறுவர்கள்  அழைத்துச் செல்­லப்­ப­டு­வது அல்­லது பெற்­றோர்­க­ளினால் விரும்பி  அனுப்­பப்­­ப­டு­வது என்­பது புதிய விடயம் அல்ல. கல்வியை இடை­ந­டுவே விட்டு விட்டு ஆடைத்­தொ­ழிற்­சா­லைகளில் வேலைக்கு செல்லுப­வர்­களும் அதிகம். இது போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு  தர­கர்­களை மாத்திரம் குறை கூற முடி­யாது. அவர்­க­ளுக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கம் மாத்திரமே காணப்படும்.

பெற்­றோர்களே தங்­க­ளது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்­துக்கு  முழுப்பொறுப்­பு­க்குரி­ய­வர்கள். ஆனால் அந்த பொறுப்பை சில பெற்றோர் சரி­வர செய்­வ­தில்லை என்­பதே உண்மை.  

பாட­சாலைக்குச் செல்ல வேண்­டிய வயதில் ஒரு பிள்­ளை­யை பாட­சா­லைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்­றோ­ருக்கும் இருக்க வேண்டிய தார்மீக கடமையாகும். பிள்ளைகளை பெற்றெடுப்பது என்பது மாத்திரம் பெற்றோரின் கடமையல்ல, அந்தப் பிள்ளைகளை சமூ­கத்­தி­ற்கு மிக சிறந்த பொக்­கி­சஷமாக கொடுக்க வேண்டும். 

சமூ­கத்தின் நாளைய தூண்­க­ளான பிள்­ளை­க­ளை வழி­ந­டத்த வேண்­டிய பொறுப்பு பெற்றோர்களை அடுத்து ஆசிரியர்களுக்கும் உண்டு,  இல­வசக் கல்­வி­யை பிள்­ளைகள் தொடர­மு­டி­யாமல் பாடசாலையைவிட்டு இடை­வி­­லகுவ­தற்கு யார் காரணம் என்று சிந்தித்தால் சமூ­கத்தின் அத்­தனை பேரும்தான் காரண கர்த்தாக்கள் ஆகின்றோம்.

சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த விடயத்தில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிறு­வர்கள் வேலைக்கு அமர்த்­தப்­படும் நிலை மாறவேண்டும். 

வீ.பி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14
news-image

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானம்...

2024-01-07 12:15:27
news-image

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசியல் தீர்வும் அவசியம்

2023-12-31 17:06:11
news-image

இமயமலை பிரகடனமும் யதார்த்த நிலைமையும்

2023-12-24 19:04:39
news-image

இணக்­கப்­பாட்­டுக்­கான முயற்­சிகள் தொடர்­வது நல்ல அறி­கு­றி­யாகும் 

2023-12-18 20:50:16
news-image

இந்தியாவின் வகிபாகத்தை வலியுறுத்தும் தமிழ்த் தரப்பு

2023-12-10 22:58:12
news-image

மலை­யக அர­சியல் தலை­மைகளின் முன்­னுள்ள கடமை,...

2023-12-04 16:48:54
news-image

பாரா­ளு­மன்­றத்தின் கெள­ர­வத்தை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சியம்

2023-11-26 18:34:28