கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் உயிரிழப்பு ; நால்வர் கைது

Published By: Vishnu

25 Aug, 2022 | 02:50 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 24 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி-கலஹா

கலஹா - பெல்வுட் பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதுடைய பெல்வுட், கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

உயிரிழந்தவரின் வீட்டில்  தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  குறித்த நபர்  நண்பர்கள் மூலம் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்

சம்பவம் தொடர்பில் பெல்வுட் பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 52 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

வெலிமட

வெலிமட - சாப்புகடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த 22 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பெண்  24 ஆம் திகதி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எதிரில்லகின் பிரதேசத்தில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய புரங்வெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்  சம்பத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர்கள்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒருவர் எனவும் சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கந்தானை

கந்தானை - கபுவத்த பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் 64 வயதுடைய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவரினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

33 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50