பன்னீர் கட்லட்

Published By: Devika

25 Aug, 2022 | 10:49 AM
image

தேவையான பொருட்கள்

பன்னீர் - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 1 கப் (மசித்தது)

பொட்டுக்கடலை - 50 கிராம் (பொடித்து வைத்தது)

முட்டை - 1

வெங்காயம் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

சிக்கன் 65 பொடி - 1 ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

இஞ்சி, வெ.பூண்டு விழுது - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

பட்டர் - தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லி, பச்சைமிளகாய், வெங்­காயம் ஆகியவற்றை பொடியாய் நறுக்க­வும். ஒரு பாத்திரத்தில் பட்டர் தவிர்த்து அனைத்தையும் சேர்த்து கலந்து­கொள்ள­வும்.

பன்னீர், முட்டையில் உள்ள ஈரப்பதமே போதுமானது. தேவைப்பட்டால் மட்டும் நீர் தெளித்து வடை மாவு பக்குவத்தில் செய்து வைக்கவும்.

அரை மணி நேரம் ஊறிய பின் சிறு உருண்டையாக எடுத்து வட்டமாக தட்டி தவா­வில் பட்டர் விட்டு பொரித்­தெடுக்க­வும்.

மிதமான தீயில் இதனை செய்ய வேண்­டும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்