நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவது நாட்டை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும் - வாசு

Published By: Digital Desk 5

24 Aug, 2022 | 03:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்க நாட்டு மக்கள் எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் வழங்கவில்லை.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாக கருதப்படும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை கம்யூனிச கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன.

அதிக உணவு பண வீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆம் இடத்தில் உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

பொருளாதார பாதிப்பு,வாழ்க்கை செலவு அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் போது நிவாரணம் வழங்கியதை போன்று தற்போதும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுகளை நிவாரணமாக வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே பொருளாதார மீட்சிக்கான இறுதி தீர்வு என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் போது நடுத்தர மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து அவர் அவதானம் செலுத்தவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு நாட்டை அடிபணிய வைக்க நாட்டு மக்கள் எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் வழங்கவில்லை.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்துவது நாட்டை காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாகவே கருதப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா முன்வைத்த பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் அவர்கள் ஜனாதிபதியுடன் சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04