2 மாடி வீடு முழுவதையும் 500 அடி தூரம் நகர்த்தும் விவசாயி

Published By: Vishnu

24 Aug, 2022 | 12:16 PM
image

இந்­திய விவ­சாயி ஒருவர், 2 மாடிகள் கொண்ட தனது வீட்டை முழு­மை­யாக 500 அடி தூரம் நக­ர்த்திச் செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார்.

சுக்­விந்தர் சிங் சுகி என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான வீடு இது. பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் பிர­தே­சத்தின் ரோஷன்­வாலா கிரா­மத்தில் இவ்­வீடு நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்­தது.  

இவ்­வீடு அமைந்­துள்ள பகுதி வழி­யாக அதி­வேக நெடுஞ்­சா­லை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­வதால் அவ்­வீட்டை தகர்க்­கு­மாறு அதி­கா­ரிகள் கோரினர். இதற்­காக இழப்­பீடும் வழங்­கப்­பட்­டது.

எனினும், புதிய வீடொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு தான் விரும்­ப­வில்லை என சுக்­விந்தர் சிங் சுகி கூறி­யுள்ளார். 

இதனால், அவ்­வீட்டை முழு­மை­யாகப் பெயர்த்து 500 அடி (152.4 மீற்றர்) தூரம் நகர்த்தி வேறு இடத்தில் கொண்டு சென்று வைப்­ப­தற்கு சுக்­விந்தர் சிங் தீர்­மா­னித்தார்.

இதற்கு பதி­லாக மற்­றொரு வீட்டை நிர்­மா­ணிக்க தான் விரும்­ப­வில்லை என்­கிறார் அவர்.

இது தொடர்­பாக சுக்­விந்தர் சிங் சுகி கூறு­கையில்,  '2017 ஆம் ஆண்டு இவ்­வீட்டை நிர்­மா­ணிக்க ஆரம்­பித்தேன். 2019 ஆம் ஆண்டு அது நிறை­வ­டைந்­தது. தற்­போது அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு மத்­தியில் இவ்­வீடு வரு­கி­றது.

அதனால் நான் வீட்டை வேறி­டத்­துக்கு கொண்டு செல்ல தீர்­மா­னித்தேன். இதற்கு 40 லட்சம் ரூபா செல­வாகும். இந்த 40 லட்சம் ரூபா செலவில் புதிய வீட்டை நிர்­மா­ணிக்­கு­மாறு சிலர் என்­னிடம் கூறு­கின்­றனர். ஆனால், இது எனது கனவு வீடு. மிகப் பெறு­தி­யான மர வேலைப்­பா­டுகள் இவ்­வீட்டில் செய்­யப்­பட்­டுள்­ளன.

இழப்­பீட்டுத் தொகையில் இது போன்ற வீட்டை நிர்­மா­ணிக்க முடி­யாது. தற்­போது பண­வீக்­கத்தை கருத்­ததிற்­கொண்டால், வீட்டின் பெறு­ம­தி­யை­விட குறைந்த தொகையே எனக்கு கிடைத்­துள்­ளது' எனத் தெரி­வித்­துள்ளார்.  

இவ்­வீட்டை நகர்த்தும் ஒப்­பந்தம் மொஹம்மத் ஷஹீத் என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இவ்­வீட்டை நகர்த்­து­வ­தற்கு வீட்டின் அடியில் சுரங்கம் அமைத்து, வீட்டை அத்­தி­வா­ரத்­துடன் முழு­மை­யாக உயர்த்­தி­யுள்­ளனர்.

இது தொடர்­பாக மொஹம்மத் ஷஹீத் கூறு­கையில், இதற்கு முன்­னரும் வீடு­களை நான் நகர்த்­தி­யுள்ளேன். ஆனால் அவை 5 முதல் 10 அடி தூரமே நகர்த்­தி­யுள்ளேன். 500 அடி என்­பது நீண்ட தூரம். எனினும் அந்த சவாலை நான் ஏற்­றுக்­கொண்டேன். சுமார் 20 பேர் இதில் பணி­யாற்­று­கின்­றனர்' எனத் தெரி­வித்­துள்ளார்.

தினமும் 5 முதல் 10 அடி தூரமே இவ்­வீடு நகர்த்­தப்­ப­டு­கி­றது.  தற்­போது 250 அடி தூரம் நகர்த்­தப்­பட்­டுள்­ளது. இதை முழு­மை­யாக நகர்த்­து­வ­தற்கு 2 மாத காலம் தேவைப்­படும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இந்­திய மத்­திய அரசின் 'பாரத்­மாலா' திட்­டத்தின் கீழ் மேற்­படி  டெல்லி, அமிர்­த­சரஸ் --,- கத்ரா அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்ட வருகிறது. 

இந்நெடுஞ்சாலை நிர்மாணம் பூர்த்தியடையும்போது, தலைநகர் புதுடெல்லியையும், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் ஊடாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தையும் அது இணைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right