சிறார்­க­ளுக்கு போதை­யூட்டி பாலியல் துஷ்­பி­ர­யோகம் : கண­வ­னுக்கு 60 வருட சிறை, மனை­விக்கு 20 வருட சிறை

Published By: Vishnu

22 Aug, 2022 | 11:54 AM
image

சிறார்­க­ளுக்கு போதைப்­பொ­ருட்­களைக் கொடுத்து, அவர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்தி படம்­பி­டித்­த­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒப்­புக்­கொண்­டுள்­ளனர். அதை­ய­டுத்து அந்­ந­ப­ருக்கு 60 வருட சிறைத்­தண்­ட­னையம் அவரின் மனை­விக்கு 20 வருட சிறைத்­தண்­ட­னையும் விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

ஒஹையோ மாநி­லத்தைச் சேர்ந்த 39 வய­தான ஸ்டீபன் ஏ வில்சன் என்­ப­வ­ருக்கே 60 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவரின் மனை­வி­யான ஜெசிக்கா ஏ வில்­ச­னுக்கு (38) 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்கள் 7 முதல் 16 வய­தான பல சிறார்­க­ளுக்கு போதைப்­பொருள் கொடுத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தா­கவும் அதை படம்­பி­டித்­த­தா­கவும் குற்­றம்­சு­மத்­தப்­பட்­டது.

இவர்­க­ளுக்கு எதி­ராக 3 சிறார்கள் சாட்­சியம் அளித்­தனர். அதை­ய­டுத்து சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டை ஸ்டீபன் வில்சன் ஒப்­புக்­கொண்டார். அதே­வேளை சிறுவர் பாலியல் வீடியோ விநி­யோ­கித்த குற்­றச்­சாட்டை ஜெசிக்கா ஒப்­புக்­கொண்டார்.

பாதிக்­கப்­பட்ட 7 வய­தான ஒரு சிறுமி சாட்­சி­ய­ம­ளிக்­கையில், தனக்கு மது­பானம் மற்றும் போதைப்­பொருள் வழங்­கப்­பட்டு, தான் அரை உணர்­வி­ழந்­தி­ருந்த நிலையில், தன்னை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக தெரி­வித்தார். 

இவ்­வன்­முறை 22 நிமி­டங்கள் கொண்ட வீடி­யோவில் பதி­வா­கி­யி­ருந்­ததை பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். 

தவழும் குழந்­தைகள் சிறார்­களை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்தும் காட்­சிகள் அடங்­கிய நூற்­றுக்­க­ணக்­கான புகைப்­ப­டங்­களை போட்­டோஷொப் மூலமும் ஸ்டீபன் வில்சன் உரு­வாக்­கி­ய­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பான ஆயி­ரக்­க­ணக்­கான உரை­யா­டல்­களை ஸ்டீபன் வில்­சனும் ஜெசிக்­காவும் தொலை­பேசி, குறுஞ்­செய்­திகள் மூலம் மேற்­கொண்­டி­ருந்­த­தையும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

ஜெசிக்­காவின் சட்­டத்­த­ரணி வாதா­டு­கையில், ஜெசிக்­காவும் சிறு வயதில் 5 வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறினார்.

17 வயதில் ஸ்டீபன் வில்சனை ஜெசிக்கா திருமணம் செய்ததாகவும் இத்தம்பதியினருக்கு 6 பிள்ளைகள் உள்ளனர் எனவும் நீதிமன்றில் தெரிவிக் கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17