கடற்­க­ரையில் ஒதுங்கிய பெண்ணின் சடலத்தால் பரபரப்பு : பொலிஸ் விசாரணையில் வெளியான உண்மை

Published By: Vishnu

22 Aug, 2022 | 12:05 PM
image

தாய்­லாந்து கடற்­க­ரை­யொன்றில், கொலை செய்­யப்­பட்ட பெண்­ணொ­ரு­வரின் சடலம் கரை­யொ­துங்­கி­யுள்­ள­தாக கூறி பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட பின்னர், அது ஒரு பாலியல் பொம்மை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

No description available.

தாய்­லாந்தின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள சோன்­பூரி மாவட்­டத்தின் பாங் சீன் மாவட்­டத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அங்கு கரை­யொ­துங்­கி­யி­ருந்த உரு­வத்தைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர். நிர்­வாண கோலத்தில் இளம் பெண்­ணொ­ரு­வரின் சடலம் ஒதுங்­கி­யுள்­ள­தாக மக்கள் எண்­ணினர். அப்பெண் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கலாம் என்ன அச்­சமும் எழுந்­தது. 

No description available.

இதனால் அவ­ச­ர­சேவைப் பிரி­வி­ன­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து பொலி­ஸாரும், மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களும் அக்­க­டற்­க­ரைக்கு விரைந்­தனர்.

எனினும், தாம் நெருங்கிச் சென்று பார்த்­த­போது, அது ஒரு பாலியல் பொம்மை எனத் தெரி­ய­வந்­தது என தாய்­லாந்து பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

'அந்த பொம்­மையின் தலை காணப்­ப­ட­வில்லை. இணை­யத்தில் தேடி பார்த்­த­போது, அது சுமார் 20,000 தாய்­லாந்து பாத் விலை­யுள்­ளது என்­பது தெரி­ய­வந்­தது' எனவும் அவர் கூறி­யுள்ளார். 

அந்த பொம்மை ஆறு அல்­லது கால்­வாயில் வீசப்­பட்ட நிலையில் கட­லுக்கு அடித்து வரப்­பட்­டி­ரக்­கலாம். 

உல்­லாசப் பய­ணிகள் அச்­ச­ம­டை­வதை தவிர்ப்­ப­தற்­காக கடற்­க­ரை­யி­லி­ருந்து அந்த பொம்மை அகற்­றப்­பட்­டுள்­ளது. 

பொம்­மையின் உரி­மை­யாளர் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்பினால், மீட்புக் குழு நிலையத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம்' எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right