இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்

Published By: Digital Desk 5

22 Aug, 2022 | 11:09 AM
image

(என்.வீ.ஏ.)

செல்ஸ்போர்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் (4 நாள்) டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து   இளையோர்   அணி   பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து, அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 387 ஓட்டங்களைக் குவித்தது.

19 வயதான ஜோர்ஜ் பெல் குவித்த சதம், 17 வயதான ரொஸ் வைட்பீல்ட் மற்றும் 18 வயதான பெர்ட்டி போர்மன் ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தின.

ரொஸ் வைட்பீல்ட், ஜோர்ஜ் பெல் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3 ஆவது விக்கெட்டில் 185 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 249 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஜோர்ஜ் பெல் 107 ஓட்டங்களையும் ரொஸ் வைட்பீல்ட் 86 ஓட்டங்களையும் பெற்றனர்.

எவ்வாறாயினும் மொத்த எண்ணிக்கை 268 ஓட்டங்களாக இருந்தபோது 3 விக்கெட்களை இங்கிலாந்து இளையோர் அணி இழந்தது.

பின்வரிசையில் பேர்ட்டி போர்மன் ஆட்டமிழக்கமால் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் துவிந்து  ரணதுங்க 100 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வனுஜ சஹான் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துலாஜ் சமுதித்த 105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை இளையோர் அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அசித்த வன்னிநாயக்க 13 ஓட்டங்களுடனும் சதிஷ ராஜபக்ஷ 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49