தமிழ் அரசியல் கட்சிகளிடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசேட கோரிக்கை

Published By: Vishnu

21 Aug, 2022 | 11:10 AM
image

தமிழ் தேசியத்தின் பால் பயணிக்கும் அனைவரையும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் 51 ஆவது ஐ.நா கூட்டத்தொடருக்கான கடிதம் தயாரிக்கும் கலந்துரையாடல் நிகழ்வு 22 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது ஆதரவினையும் கருத்துக்களையும் வழங்குமாறு தமிழ் தேசியத்தின் பால் பயணிக்கும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்புக் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடருக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 2018மார்ச் மாதக் கூட்டத் தொடரிலிருந்து எமது சாட்சியங்களை அளித்து வருகின்றோம். கூட்டத் தொடருக்கு செல்ல முடியாத காலத்தில் இலத்திரனியல் ஊடகம் மூலம் சாட்சியமளித்துள்ளோம்.

2017 பெப்ரவரி 20ஆம் திகதி தொடங்கிய போராட்டத்தில் எம்முடன் இணைந்திருந்த 138 பெற்றோர்கள் தற்போது இறந்த நிலையிலும் 2000 நாட்களுக்கு மேலாக எம் உயிரினும் மேலான, எங்கள் உறவுகளுக்கான நீதி கோரி போராடி வருகின்றோம்.

கடந்த வருடமும் மார்ச் மாதக் கூட்டத் தொடருக்காக சகல அரசியல் கட்சிகளினதும், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட அமைப்புகளினதும் ஒத்துழைப்புடன் ஒருமித்து எம் கோரிக்கைகள் ஜெனிவாவுக்கு மகஜராக அனுப்பப்பட்டது.

அதேபோல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த 51ஆவது கூட்டத் தொடருக்கு முன்பாக நாம் அனைவரும் இணைந்து எமது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன் வைப்பது அவசியமாகிறது.

எனவே, இது தொடர்பாகக் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்து அதை செயல்வடிவாக்குவதற்காக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தங்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11