சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் 10 ஆம் கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 5

20 Aug, 2022 | 01:17 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 14 கழகங்கள் பங்குபற்றும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் 10 ஆம் கட்டப் போட்டிகள் இவ்வாரம் நடைபெறவுள்ளன.

இன்று சனிக்கிழமை (20) இரண்டு போட்டிகளும் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) நான்கு  போட்டிகளும் செவ்வாய்க்கிழமை (23) ஒரு போட்டியும் நடைபெறவுள்ளன.

அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்கும் ஜாவா லேன் கழகத்தை குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் இ.போ.ச. கழகம் இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளது.

கடந்த வாரம் வரை நடந்த முடிந்த 9 கட்டம்வரை 8 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளுடன் அணிகள் நிலையில் 25 புள்ளிகளைப் பெற்று நிகர கோல்கள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருக்கும் ஜாவா லேன் கழகம் மற்றொரு வெற்றியை குறிவைத்து இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அப் போட்டியில் ஜாவா லேன் கழகம் வெற்றிபெற்றால் சம்பியனாவதற்கான அதன் வாய்ப்பு அதிகரிக்கும்.

மறுபுறத்தில் தோல்விகளுக்கு மத்தியிலும் திறமையை வெளிப்படுத்தி வரும் இ.போ.ச. கழகம் இன்றைய போட்டியில் எதிர்பாராத முடிவை ஏற்படுத்த முயற்சிக்கும் என கருதப்படுகிறது.

இதேவேளை, நிகம்போ யூத் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான மற்றொரு போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

மாறுபட்ட பெறுபேறுகளை ஈட்டி வந்துள்ள இந்த இரண்டு கழகங்களுக்கும் இடையிலான போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் ஜாவா லேன் கழகத்திடம் படுதோல்வி அடைந்த நிகம்போ யூத் கழகம் இன்றைய போட்டியில் தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடவுள்ளது.

அதேவேளை, ஆபிரிக்க வீரர்களை இணைத்துக்கொள்ளாமல் உள்ளூர் வீரர்களில் மாத்திரமே நம்பிக்கைக் கொண்டு விளையாடிவரும் நியூ ஸ்டார் கழகம் வெற்றிபெற வேண்டும் என்ற கங்கணத்துடன் நிகம்போ யூத் கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35