பதவிகளை பகிரும் சூதாட்டத்தில் நாம் பங்கு கொள்ளமாட்டோம் - சஜித்

Published By: Vishnu

19 Aug, 2022 | 09:38 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டாணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு பதவிகளை பகிர்ந்தளிக்கும் சூதாட்டத்தில் பங்குகொள்ளாது எனவும் நாட்டுக்காக கொள்கைகளுடன் கூடிய நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக்குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு வழங்கப்படும் என்று பிரதான எதிர் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

18 ஆம் திகதி வியாழக்கிழமை எதிர்க் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை அவர் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

அரசாங்கம் நீட்டும் அமைச்சு பதவிகளை பெற்று கொள்வதில் எமக்கு எந்தவிதமான உடன்பாடுகளும் இல்லை.மேலும் அமைச்சு பதவிகளை பகிர்ந்தளிக்கும் சூதாட்டத்தில் பங்கு கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒருபோதும் இணங்காது.

நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்கள் பெரும் சோகத்திலும் அசௌகரியத்திலும் உள்ள வேளையில் ஊடகத்துறையில் இருக்கும் சிறு தரப்பால் போலிச் செய்திகளை தயாரித்து தொலைக்காட்சிகளிலும் மறுநாள் பத்திரிகைகளில் வெளியிடப்படுகிறது.

மேலும் அச்செய்திகள் மூலம் சில ஊடகங்கள் மக்களுக்கு நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியினர் அதிகாரமோக அரசியல் பயணத்தை மேற்கொள்வது போன்ற தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முயற்சிக்கிறது.

இந்நிலையில், இவ்வாறான  செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அவ்வாறான கீழ்த்தரமான ஊடகப் பிரச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று நாட்டு மக்களிடம்  கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது களனி ரஜமஹா விகாரையை யும் பௌத்த சாசனத்தையும் அற்ப அரசியலுக்காக ஏலத்தில் விட்டு அரசியல் இலாபங்களுக்காக சில ஊடகங்கள் செயற்பட்டது என்பது நாம் அறிந்ததே அரசாங்கமானது சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக சுமார் 70 அமைச்சுப் பதவிகளை கைக்கூலிகளுக்கு பகிர்ந்தளிக்கும் சூதாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது.

 ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சுக்களை ஏற்பதை விடுத்து கொள்கைகளுடன் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு வழங்குவதற்கு தயார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13