ஆரோக்கியம் காக்கும் இந்துப்பு

Published By: Robert

11 Nov, 2016 | 11:16 AM
image

உப்பில்லா பண்டம் குப்பையிலே.. என்பதைப் போல் எம்முடைய உணவில் உப்பு இல்லாமல் இருக்க இயலாது. அதே சமயத்தில் உப்பிற்கு மாற்றும் உப்பு தான். எம்முடைய உடலைப் பாதுகாக்க வேண்டும்என்றால் அயோடின் கலக்காத உப்பை பயன்படுத்தவேண்டும். இவைஇப்போதும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கிறது. அதை வாங்கலாம் அல்லது இந்துப்பு வாங்கலாம்.

இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். இது பெருன்பான்மையாக வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும்ஊத நிறத்திலும் காணப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது.

இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு. சாதாரண உப்பில் இருப்பது போலவே இதிலும் சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றுடன் இயற்கையாகவே இதில் அயோடின் சத்துடன் லித்தியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீசு,இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் இருக்கின்றன.

பெரும்பாலும் உப்பு தான் உடலில் பித்தத்தை அதிகரித்து தலை கிறுகிறுப்பு,மயக்கம், பித்தவாந்தி,உயர் இரத்த அழுத்தம் போன்ற பித்த நோய்களை உண்டாக்கும். ஆனால் இந்துப்பைப் பயன்படுத்தும் போது அது பித்தத்தை மட்டுமல்லாமல் கபத்தையும் சமன் செய்து, கப பிணிகளான சளி, இருமல் ஆகியவற்றை வராமல் தற்காக்கின்றன. ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன. கண் பார்வையையும் பாதுகாக்கிறது. இதயத்தையும் பாதுகாக்கிறது. உடல் உறுதியையும் எற்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல்கள் உணவினை நன்கு உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவி புரிகிறது. அத்துடன் நல்ல உறக்கத்தையும் உண்டாக்குகிறது. அயோடின் உப்பிற்கு மாற்றாக இனி இந்துப்புவை பயன்படுத்தலாம்.

டொக்டர் ராஜ்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29