பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டமை ஜனநாயக விரோத செயல் - சரத் பொன்சேகா

Published By: Digital Desk 5

19 Aug, 2022 | 09:48 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை  ஜனநாயக ஆட்சி நாட்டில் இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அது ஜனநாயக விரோத செயல் எனவும் பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ரணில்-ராஜபக்ஷ டீல் அரசாங்கத்தை விரட்டுவோம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இல்லாதொழிப்போம்,

புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னிறுத்தி போராடுவோம்,மேலும் கடன்கள் வேண்டாம், திருடிய நிதியை திருப்பி தாருங்கள், மிகை வரி சுமை மற்றும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள், அடக்குமுறையை நிறுத்துங்கள், கைது செய்யப்பட்ட போராட்டகாரர்களை விடுதலை செய்யுங்கள் என்ற நியாயமான காரணங்களை முன்வைத்து வியாழக்கிழமை (18) அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைதியான முறையில்  மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தாக்கி அவர்களை கலைப்பதற்கு ஆயிரக்கான ஆயுதம் தாங்கிய பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இருப்பினும் குறித்த போராட்டத்தை இடைநடுவில் மாணவர்கள் மீது  நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதோடு மற்றும்  மாணவர்கள் 16 பேர் வரையில் கைது செய்யப்பட்டார்கள். போராட்டமும் இடைநடுவில் கலைக்கப்பட்டமை ஒரு ஜனநாயக விரோத செயலாகும்.

கடந்த மே மாதம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைதியான மற்றும் அஹிம்சை வழியிலான போராட்டத்தின் மீது சில கும்பல்கள் கொண்டு தாக்குதல் நடத்தினார். தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் ஆயுதமேந்திய காவல் துறை மற்றும் இராணுவ வீரர்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு களமிறங்குகிறார்கள்

மே தாக்குதலுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை முழு நாடும் அறிந்தது. இவ்வாறான செயல்பாடுகளால் இன்னும் தீவிரமான மக்கள் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களிடம் இருந்து எழும் போராட்டங்கள் ஒடுக்குவதற்கு ஒருபோதும் உலக நாடுகள் அங்கீகரிக்காது சர்வதேச ஆதரவு இன்றிமையாத இந்த நேரத்தில் இது போன்ற தேவையற்ற அடக்குமுறை சந்தேகத்திற்கு இடமின்றி முழு நாட்டையும் நெருக்கடிகளுக்கு தள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27