நாட்டின் முன்னேற்றம் தேசிய பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

Published By: Digital Desk 5

19 Aug, 2022 | 09:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின்  தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளவும்,ஒத்துழைப்பு வழங்கவும்  எவரும் முன்வரமாட்டார்கள்,ஆகவே ஒரு நாட்டின் முன்னேற்றம் தேசிய பாதுகாப்பில் தங்கியுள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரால் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் , ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பில் 15 விடயங்கள் உள்ளடங்குகின்றன.நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஆட்புல எல்லைக்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதனை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கருத வேண்டும்.30 வருட கால யுத்தம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.யுத்தத்தின் கொடுமையினை எவரும் மறக்கவில்லை.

நாட்டில் தொற்று நோய் பரவல்,இயற்கை அனர்த்தம் ,உணவு பாதுகாப்பு மற்றுமும் சுகாதாரம்,பொது போக்குவரத்து சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டு மக்கள் வாழ முடியாத சூழல் தோற்றம் பெறுமாயின் அதனை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான தன்மையாக கருத வேண்டும்.

நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின்  தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் இருக்கும் நாட்டிற்கு எவரும் முதலீடுகளை மேற்கொள்ளவும்,ஒத்துழைப்பு வழங்கவும் முன்வரமாட்டார்கள்,ஆகவே ஒரு நாட்டின் முன்னேற்றம் தேசிய பாதுகாப்பில் தங்கியுள்ளது.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு.அதனை தொடர்ந்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு,இராணுவம்,பொலிஸ்,முப்படை,சிவில் பாதுகாப்பு திணைக்களம்,நீதிமன்றம்,சட்டமாதிபர் திணைக்களம் மற்றும் நீதியமைச்சு ஆகியவை தேசிய பாதுகாப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன.

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஊடகத்துறைக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகிறது.ஊடகங்களின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாக காணப்பட்டாலும்,ஒருசில செயற்பாடுகள் கவலைக்குரியன.யுத்த காலத்தில் ஊடகங்கள் செயற்பாடுகளுக்கும்,யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான காலப்பகுதியிலும் ஊடக வகிபாகத்தில் பாரிய மாற்றம் காணப்படுகின்றன.

அரசியல் நெருக்கடி தீவிரடைந்த பின்னணியில் கடந்த மாதங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் போராட்டங்களின் போது பாதுகாப்பு தரப்பினர் போராட்டகாரர்களினால் கடுமையான முறையில் விமர்சிக்கப்பட்டார்கள்.வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் நீதிமன்றிற்கு முன்னிலையாகும் போது நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் அவர்களுக்கு ஆதரவாக முன்னிலையாகி நீதிமன்றில் அவர்களை கைத்திட்டி வரவேற்றார்கள்.

வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்தும் போது அவர்களுக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகளினால் பாதுகாப்பு தரப்பினர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு பாதுகாப்பு தரப்பினருக்கு உண்டு.நாட்டின் முக்கிய அடையாளமாக கருதப்படும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04