'சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியம்' - கத்தியால் குத்தியவர் தெரிவிப்பு

19 Aug, 2022 | 02:19 PM
image

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்து விட்டார் என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்ததாக அவரை தாக்கிய நபர் தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75), அமெரிக்காவில் நியூர்க்கில் ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டபோது சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.

படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டி, மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்துள்ளார். அவரைத் தாக்கிய 24 வயதான ஹாதி மாட்டர் என்பவர் கைது செய்யப்பட்டார். 

சவ்தாகுவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் 'நியூயோர்க் போஸ்ட்' பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார்.

 அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

"அவர் உயிர் பிழைத்து விட்டார் என நான் கேள்விப்பட்டபோது ஆச்சரியம் அடைந்தேன். ருஷ்டியின் சர்ச்சைக்குரிய புத்தகத்தில் 2 பக்கங்களைத்தான் வாசித்துள்ளேன். அவரை எனக்கு பிடிக்காது. அவர் ஒரு நல்ல மனிதர் என நான் நினைக்கவில்லை. சவ்தாகுவாவுக்கு அவர் வருகிறார் என டுவிட்டரில் தெரிந்து கொண்டு அங்கு செல்ல நான் ஈர்க்கப்பட்டேன். அவர் இஸ்லாம் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். அவரை நானாகத்தான் தாக்கினேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10