கொரோனா பரவல் குறைந்துள்ளது - உலக சுகாதார அமைப்பு

Published By: Digital Desk 5

19 Aug, 2022 | 02:32 PM
image

கொரோனா பரவல் கடந்த 3 ஆண்டுகளாக பொது மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது. தற்போது இதன் தாக்கம் தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

கடந்த வாரம் 54 இலட்சம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. இது அதற்கு முந்தையை வாரத்தை விட 24 சதவீதம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் கிட்டத்தட்ட 40 சதவீதமும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இறப்புகளும் குறைய ஆரம்பித்து இருக்கிறது. ஆனாலும் ஆசியாவில் ஒரு சில பகுதிகளில் கொரோனா பரவலால் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படகிறது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் கூறியதாவது:-

கொரோனாவுடன் வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்தாலும் கடந்த 4 வாரங்களில் இறப்பு விகிதம் 35 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

இதனால் பொதுமக்கள் இதுவரை கடைபிடித்து வந்த முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனே அதனை போட்டுக்கொள்வது நல்லது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது நம்மை மட்டுமல்ல சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35