அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கு; ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Published By: Rajeeban

19 Aug, 2022 | 11:42 AM
image

சென்னை: அதிமுக தலைமை அலுவலக கலவரம் தொடர்பான வழக்கில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்பேரில் இருதரப்பிலும் தலா 200 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி இபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், விருகை என்.ரவி, அசோக், சத்யநாராயணன் உள்ளிட்ட 37 பேர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதையடுத்து 37 பேரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதேபோல, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பிலும்முன்ஜாமீன்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நடந்தது. அப்போது இந்த வழக்கில் போலீஸார் பதிலளிக்கும் வரை இருதரப்பிலும் மனுதாரர்கள் யாரையும் கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நீதிபதி, விசாரணையை ஆக.30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52